முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்ட பெண் வேட்பாளர் ஒருவரை கொலை செய்து ரயர் போட்டுக் கொழுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் அடியாட்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற புளொட் கட்சி தமது கட்சி சார்பில் றெட்பானாவில் இருந்து மூன்று பிள்ளைகளின் தாயாராகிய பெண் ஒருவரை தெரிவு செய்திருந்தது.
குறித்த பெண் வேட்புமனுவில் கையெழுத்திடுவதற்காக நேற்று புதுக்குடியிருப்பிற்கு சென்றிருக்கின்றார்.
சிவமோகனின் அலுவலகத்தினைச் சென்றடைந்த அந்தப் பெண்ணை வாசலில் வைத்து சிவமோகனின் கையாட்கள் மிரட்டியிருக்கின்றனர்.
தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும் அவ்வாறு போட்டியிட்டால் கொலை செய்து ரயர் போட்டுக்கொழுத்தப்படுவாய் என்றும் அந்தப் பெண்ணை அவர்கள் மிரட்டியிருக்கின்றனர்.
அச்சம் அடைந்த பெண் அங்கிருந்து ஓடிச் சென்று தலைமறைவாகியிருப்பதுடன் தேர்தலில் இருந்து ஒதுங்குவதாகவும் முடிவெடுத்திருப்பதாகவும் தெரியவருகிறது.
குறிப்பாக மிரட்டல் நடைபெற்றபோது நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் சம்பவ இடத்தில் நின்றிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

