இந்து கோவில் குளத்தில் தண்ணீர் நிரப்ப பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு

266 0

பாகிஸ்தானில் உள்ள பழமையான இந்து கோவில் குளத்திற்கு 7 நாட்களுக்குள் தண்ணீர் நிரப்பும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சாகிப் நிசார், தானாக முன் வந்து இந்த வழக்கை  விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். சாகிப் நிசார் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது.  அப்போது கடாஸ் ராஜ் கோவில் குளத்தை காக்க பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடாஸ் ராஜ் கோவில் குளத்தில் 7 நாட்களுக்குள் தண்ணீர் நிரப்பும்படி பஞ்சாப் அரசு மற்றும் பெஸ்ட்வே சிமென்ட் ஆலை நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சுற்றுச்சூழல் சார்ந்த பாதிப்பு என்பதால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் சிமெண்ட் ஆலைகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a comment