காணாமல் ஆக்கபட்டோருக்கான சர்வதேச தினமான இன்று வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

419 0

IMG_0263காணாமல் ஆக்கபட்டோருக்கான சர்வதேச தினமான இன்று வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக நிறுவனங்களைச் சாhந்தவர்களினால் இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கசெய்யப்பட்டிருந்தன.இதன்படி, யாழ்ப்பாணத்தில் ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்ட சிலர் எமது செய்தி சேவைக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

இதனிடையே, திருகோணமலையிலும் காணாமல் ஆக்கபட்டோருரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
வவுனியாவில் ஆர்ப்பாட்டம் முன்னைடுக்கப்பட்;டது.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டேர் தினத்தையொட்டி இன்று மன்னாரிலும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து அமைதி போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.இன்று முற்பகல் 10 மணிளயவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடிய காணாமல் போனவர்களின் உறவினர்கள் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.காணாமல் போன, கடத்தப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அமைதி கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதியில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது கோரிக்கை அடங்கிய மனுவை தேசிய நல்லிணக்க பொறிமுறைக்கான வலய செயலனியின் செயலாளரிடம் கையளித்தனர்.இதனிடையே, கிளிநொச்;சி கந்தசுவாமி கோவில் முன்பாகவும் காணாமல் போன உறவுகள் ஒன்றுகூடி கவனயீர்ப்பு போராட்;டம் ஒன்றினை நடத்தியுள்ளதுடன் தமதுகோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை தேசிய நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலேசணைக்கான செயலணியிடம் சமர்பித்தனர்.