தேங்காய் இறக்குமதிக்கு அரசாங்கம் பொறுப்பு’

372 0

தேங்காய் இறக்குமதி நடைமுறை சட்டவிரோதமானது என்றும் இதற்கு அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அனைத்து இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரட்ண குற்றஞ்சாட்டியுள்ளார்.

தம்புளையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“தேங்காயில் ஏற்பட்ட ஒரு வகை பூச்சி காரணமாகவே, தேங்காய் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டது. இந்தப் பூச்சி பரவும் நோய், வெளிநாடுகளிலிருந்தே, இங்கு வந்துள்ளது. பயிர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தேங்காய் இறக்குமதி செய்யப்படும் இந்த நடைமுறை சட்டவிரோதமானதாகும்” என்று அவர் இதன்போது கூறியுள்ளார்.

”கடந்த கால அரசாங்கத்தின் போது, இலங்கைக்​கு கொண்டுவரப்பட்ட தேங்காய் கப்பலொன்று, இறக்குவதற்கு முன்னரே, திருப்பியனுப்பப்பட்டது. இம்முறையும் துறைமுகத்துக்கு வந்த தேங்காய்க் கப்பல், பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் மீண்டும் திருப்பியனுப்பப்பட்டது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“கடந்த கால அரசாங்கம், புல்லை இறக்குமதி செய்ததைப்போன்று, மரக்கறி​களையும் இறக்குமதி செய்தால், ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை” என்று அவர் கூறினார்.

Leave a comment