வல்லரசு நாடுகளின் குப்பைக் கூடையாக இலங்கை மாறியுள்ளது

485 0

இலங்கை இப்போது, வல்லரசு நாடுகளின் குப்பைக் கூடையாக மாறியுள்ளதென, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது,

“வேறு சமூகங்களின் உற்பத்திப் பொருட்களை குரோதம் காரணமாக கொள்வனவு செய்யக் கூடாது என்று கூறி, சர்வதேச உற்பத்தி நிறுவனங்களுக்கு வாய்ப்பளித்து விட்டு மௌனமாக இருந்து விடுகின்றோம். இலங்கை சுதந்திரமடை  -ந்ததிலிருந்து, இலங்கையிலுள்ள எந்தச் சமூகமும் இலாபமடையவில்லை.

“இலங்கை இப்பொழுது சர்வதேச வல்லரசு நாடுகளின் குப்பைக் கூடையாக மாறியுள்ளது. இதனைத்தான் நாம் இனவாதத்தால் மதவாதத்தால் சாதித்திருக்கின்றோம். இலங்கையைப் போல சிங்கப்பூரை ஆக்குவேன் என்ற அந்நாட்டு ஜனாதிபதி, அதனை உலகம் வியக்கும் உயர்தரமான நாடாக மாற்றிவிட்டார். ஆனால், நாம் இருந்த இலங்கையையும் இழந்துவிட்டு இன்னமும் அழிவுக்கான பாதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துகின்றோம்” என்று குறிப்பிட்டார்.

Leave a comment