சென்னை: வேலம்மாள் பள்ளி மாணவர்களின் நடிப்பில் வீரமங்கை வேலுநாச்சியார் நாடகம்

4123 21

சென்னை வேலம்மாள் பள்ளி மாணவர்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பில் வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு நாடகம் அறங்கேற்றப்பட்டது.

பொன்னேரி, வேலம்மாள் போதி கேம்பஸ் மாணவர்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பினால், மண் பேசும் சரித்திரத்தைக் கண்முன்னே காட்டும் “வீரமங்கை வேலுநாச்சியார்” இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டப் பெண்ணரசியின் வாழ்க்கை வரலாற்று நாடகமானது சென்னை, ஹாரிங்டன் சாலையில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் மையத்தின் டோபோவான் அரங்கத்தில் அறங்கேற்றப்பட்டது.

பொன்னேரி, வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியைச் சார்ந்த 125 மாணவர்களின் கலையாற்றலை வீறுடன் வெளிப்படுத்தும் விதமாகவும், சமூக உணர்வை வளர்க்கும் விதமாகவும் நடைபெறும் இந்நாடகத்தின் மூலம் திரட்டப்பட்ட நிதி ரூ.17,00,000/- (ரூபாய் பதினேழு லட்சம்) அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்நாடகத்திற்கு வேலம்மாள் கல்விக் குழுமத்தின் நிறுவனர் தலைவர் M.V.முத்துராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். வேலம்மாள் கல்விக்குழுமத்தின் இயக்குநர் M.V.M. சசிக்குமார் அவர்களும், பொன்னேரி வேலம்மாள் அறிவுப்பூங்காவின் கல்வித்துறை நிர்வாக இயக்குநர் கீதாஞ்சலி சசிக்குமார் அவர்களும் முன்னிலைப் பொறுப்பேற்று விழாவிற்கு வருகை தரும் சிறப்பு விருந்தினர்களையும் முக்கிய பிரமுகர்களையும் வரவேற்றனர்.

OVM டான்ஸ் அகாடெமியின் நிறுவனர் இயக்குநர் ஸ்ரீராம் சர்மா அவர்களும், அவரது துணைவியார் திருமதி மணிமேகலை சர்மா அவர்களும் மாணவர்களை ஒருங்கிணைத்து 1 1/2 மணிநேர நேரலை நாட்டிய நாடகமாக மிகப்பிரம்மாண்டமாக
அமைத்து இருந்தனர்.

தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திருமதி தமிழிசை செளந்திரராஜன் ,பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவர் வானதி சீனிவாசன், தி.மு.க.வின் நட்சத்திரப் பேச்சாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சவுமியா அன்புமணி, நடிகர் ராஜேஷ் உள்ளிட்ட சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

Leave a comment