கராத்தே சம்பியன் பட்டத்தை வென்ற ஈழத்துச் சிறுவன்

282 0

p41ஈழத்தை  பிறப்பிடமாகக் கொண்ட அகிலன் கருணாகரன் என்ற சிறுவன் 2016ஆம் ஆண்டுக்கான கராத்தே உலக சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.  பிரித்தானியாவில் வசித்துவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அகிலன் கருணாகரன் டப்ளினில் கடந்த 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நடைபெற்ற கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார்.

இதில் 36 நாடுகளில் இருந்து 2254 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். kumiteக்கான போட்டியில் 66 போட்டியாளர்கள் பங்கேற்ற பிரிவில் விளையாடி முதலாம் இடத்தைப் பிடித்துக்கொண்டதுடன் தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார். அத்துடன் இந்த ஆண்டுக்கான உலக சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

Leave a comment

Your email address will not be published.