ஜெருசலேம் விவகாரம்: டிரம்ப் அறிவிப்புக்கு குவியும் எதிர்ப்புகள் – வெடித்தது போராட்டம்

4 0

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை அடுத்து பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.

கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லிம் மதத்தினருக்கு புனித நகராக இருக்கும் ஜெருசலேம் தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய கிழக்கு போரின் போது பாலஸ்தீனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார்.

டிரம்ப்பின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமல்லாது பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், துருக்கி போன்ற ஐரோப்பிய நாடுகளும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. ஒட்டுமொத்த அமைதியை குலைக்கும் அறிவிப்பு இது என பல்வேறு நாட்டு தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

ஜெருசலேம் நகர்

இந்நிலையில், டிரம்ப் தனது முடிவை அறிவித்த சில மணி நேரங்களிலேயே பாலஸ்தீனின் பெத்தலகேம் நகரில் (இயேசு பிறந்ததாக கூறப்படும் இடம்) உள்ள பழமையான தேவாலையத்தில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரத்தின் விளக்கை அணைத்து அங்குள்ள கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனது முடிவை அறிவிக்கும் டிரம்ப்

டிரம்ப் புகைப்படத்தை எரித்த அவர்கள், ‘ஜெருசலேம் பாலஸ்தீனத்தின் இதயம்’ என்று கோஷங்களை எழுப்பினர். இதேபோல, பாலஸ்தீன தலைவர் யாசிர் அராபாத் அடக்க தலமான ரமல்லா நகரில் திரண்ட பாலஸ்தீனியர்கள் டிரம்ப்புக்கு எதிராக ஆவேச குரல்களை எழுப்பினர்.

காஸா, மேற்கு கரை பகுதிகள் மட்டுமல்லாது லெபனான், ஜோர்டான் ஆகிய நாடுகளில் அகதிகள் முகாமில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நாளை அவசரமாக கூட உள்ளது.

Related Post

பிரமோஸ் ஏவுகணை சோதனையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நிறைவேற்றியது

Posted by - May 3, 2017 0
தரையில் இருந்து கிளம்பிச் சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் 3-ம் வரிசை பிரமோஸ் ஏவுகணை சோதனையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நிறைவேற்றியது.

டிரம்ப் மருமகளுக்கு உடல் நலம் பாதிப்பு: பார்சலில் வந்தது ஆந்த்ராக்ஸ் பவுடரா?

Posted by - February 13, 2018 0
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மருமகள் வெனிசா திடீரென உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வந்த பார்சல் ஆந்த்ராக்ஸ் பவுடராக இருக்கலாமோ என அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகளுடன் மலேஷிய படகு ஒன்று காணாமல் போயுள்ளது.

Posted by - January 29, 2017 0
சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த மலேஷிய படகு ஒன்று காணாமல் போய் உள்ளதாக மலேஷிய கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். காணாமல் போன படகில் 28 சுற்றுலாப் பயணிகள் உட்பட…

உலகின் மிக வயதான மனிதர் 114வது வயதில் காலமானார்.

Posted by - August 14, 2017 0
இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர் கிரிஸ்டல். 114 வயதான இவர் உலகின் மிக வயதான மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்தவர். இவர் அண்மையில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்…

8 வெனிசுலா அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை

Posted by - August 10, 2017 0
வெனிசுலாவில் புதிய அரசியலமைப்பு சட்டம் இயற்றுவதற்காக ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ முடிவு செய்திருந்த நிலையில், இதற்கான அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களை நியமிப்பதற்கான தேர்தல் கடந்த தினம்…

Leave a comment

Your email address will not be published.