வத்தளையில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கு சிங்கள மக்கள் எதிர்ப்பு!

420 0

FotorCreated-502வத்தளை ஒலியமுல்லவில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது. இந்நிகழ்வின்போது திடீரென மேடையைநோக்கிச் சென்ற சில பௌத்த குருமார் அங்கு தமிழ் பாடாசலை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இது சிங்களப் பிரதேசம் என்றும் இதில் தமிழ் பாடசாலை அமைக்கப்பட்டால் பக்கத்தில் உள்ள மைதானத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு, எமது பிரதேச பிள்ளைகள் விளையாடுவதற்கு மைதானம் இல்லாமல் போய்விடும் என சில பௌத்த பிக்குகள் நிகழ்வில் கலந்துகொள்வுதற்காக வருகை தந்திருந்த அமைச்சர் ஜோனிடம் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

அத்துடன், ஒலியமுல்ல சந்தியில், அப்பிரதேசத்தின் சிங்கள மக்கள், தமிழ்ப் பாடசாலை அமைப்பதற்கு எதிராக கைகளில் பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் ‘இதுவா உங்கள் நல்லிணக்கம்; நல்லாட்சி இதுவா? என சிறீலங்கா அதிபரிடம் கேள்வி கேட்கும் விதமான பதாகைகள் ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒலியமுல்ல பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கருகிலும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், அமைச்சர் ஜோனுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது காவல்துறையினர் அமைச்சர் ஜோனினையும் நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்தவர்களையும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.

இதன்பின்னர் அங்குவந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மேடையில் கட்டியிருந்த அமைச்சர் ஜோனுடைய படம் தாங்கிய பதாதைகளை கால்களால் மிதித்து தீ வைத்துக் கொளுத்தினர்.