மஹிந்த ஆட்­சியை கவிழ்க்­கவே ரணில் -– மைத்­திரி கூட்­ட­ணி­ -திஸ்ஸ

282 0

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசிய கட்­சியும் இணைந்­த­மை­யா­னது நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அல்ல. மாறாக மஹிந்த ஆட்­சியை கவிழ்ப்­ப­தற்­காக மாத்­தி­ரமேயாகும். இவ்­விரு கட்­சி­க­ளும் அமைச்­சுக்களை பகிர்ந்துகொண்டாலும் இருவேறு கொள்­கைகளை கொண்டே அர­சி­யலை நடத்தி வரு­கின்­றன என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திஸ்ஸ அத்­த­நா­யக்க தெரி­வித்­தார்.

மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய மஹா­சங்­கத்­தி­னரை நேற்று சந்­தித்த பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷ­வி­ன் ஆட்­சியை கவிழ்ப்­ப­தற்­கா­கவே யன்றி வேறு எந்த கார­ணத்­திற்­கா­கவும் ஸ்ரீல ங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசிய கட்­சியும் ஒன்­றி­ணையவில்லை. முன்னைய ஆட்சியைக் கவிழ்ப்­ப­தற்­கா­கவே ஒன்­றி­ணைந்­த­னர்.  நாட்டை முன்­னேற்­றப்­பா­தையில் இட்­டுச்­செல்­வ­தற்­காக அல்ல. ஆனால் இவ்­விரு கட்­சி­களும் ஒரு நோக்­கத்தின் கீழ் செயற்­ப­ட­வில்லை. அதனால் தற்­போது ஆட்­சியில் விரிசல் ஏற்­பட்­டுள்­ளது.

மேலும் ஐக்­கிய தேசிய கட்­சியும் ஸ்ரீல ங்கா சுதந்­திரக் கட்­சியும் மேல் மட்­டத்தில் ஒன்­றி­ணைந்து காணப்­பட்­டாலும் கீழ் மட் ­டத்தில் ஒன்­றி­ணைந்து செயற்­ப­ட­வில்லை என்­பது தெளிவா­கி­றது. காரணம் ஒரே நோக்­கத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படவில்லை. ஏதோ ஒரு காரணத் திற்காக  ஒன்றிணைந்துள்ளோம் என அவர் கள் தெரிவித்தாலும் அவர்களின் செயற்பாடு வேறொன்றாகவே காணப்படுகிறது என் றார்.

Leave a comment