நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: குறுக்குத்துறை முருகன் கோயில் மூழ்கியது

298 0

தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயில் தண்ணீரில் மூழ்கியது.

குமரிக்கடலில் நிலைகொண்ட ஒக்கி புயல் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் இன்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நெல்லையில் உள்ள தரைப்பாலத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறுக்குத்துறை முருகன் கோயில் வெள்ளத்தில் மூழ்கியது. கனமழை தொடர்வதால் சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் வெள்ளத்தின் அளவு அதிகரிக்கலாம் என்பதால், குழந்தைகள் வெள்ளப்பெருக்கை வேடிக்கை பார்க்க செல்வதை பெற்றோர் அனுமதிக்கக் கூடாது.

Leave a comment