ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பது உண்மைதான்: தோழி பரபரப்பு பேட்டி

296 0

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பது உண்மை தான் என்றும், அந்த மகள் அம்ருதா என்றும் அவருடைய தோழி கீதா கூறியுள்ளார்.

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி கீதா. சென்னையை சேர்ந்த இவர் ஜெயலலிதா மறைந்தவுடன் அவரது மரணத்துக்கு நீதி விசாரணை தேவை என்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஜெயலலிதா கொலை செய்யப்பட்டார் என்றும் கூறி வந்த கீதா தற்போது புதிய குண்டை வீசி உள்ளார்.

ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பது உண்மை தான் என்றும், அந்த மகள் அம்ருதா என்றும் அவர் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் தனியார் டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

நடிகர் சோபன்பாபுவுக்கும், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் பிறந்த பெண் தான் அம்ருதா. இது ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் தெரியும். 1996ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுடன் தொடர்பில் இருந்தவர் அம்ருதா என்பது எனக்கு தெரியும்.

அம்ருதாவை பொறுத்த வரையில் பணம், சொத்து எதற்கும் ஆசைப்படவில்லை. ஜெயலலிதாவின் மகள் என்ற உரிமையே போதும் என்று நினைக்கிறார். அவருக்கு டி.என்.ஏ. சோதனையை முதலில் நடத்துங்கள்.

அப்போதுதான் உண்மை தெரியவரும். அம்ருதா பலமுறை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை ரகசியமாக சந்தித்து இருக்கிறார்.

1999-ம் ஆண்டு நான் ஆந்திராவில் உள்ள சோபன்பாபு வீட்டுக்கு சென்றேன். அப்போது தனக்கு மகள் இருப்பதாகவும், அந்த மகள் தான் அம்ருதா என்றும் அவர் என்னிடம் கூறினார். எனவே டி.என்.ஏ. சோதனை நடத்தினால் உண்மை வெளியாகி விடும்.

அம்ருதா ஜெயலலிதாவின் மகள் என்று நிரூபிக்கப்பட்டால் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும். ஜெயலலிதாவின் மகள் அம்ருதா என்ற உண்மையை நீண்ட காலம் மறைத்து இருக்க முடியாது. அந்த உண்மை விரைவில் வெளியாகும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்த போது அவரை பார்க்க அம்ருதா சென்னை வந்தார். அவரை அனுமதிக்க மறுத்து விட்டனர்.

அப்போது துணை முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஜெயலலிதாவை சந்திக்க அம்ருதா அனுமதி கேட்டார். ஆனால் அவர் அம்ருதாவை கண்டு கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment