ஈ, நுளம்பு நாசினி திர­வத்தை தெளித்து மீன்­களை விற்­பனை செய்­தவர் கைது

332 0

அத்­து­ரு­கி­ரிய, மிலே­னியம் சிட்டி பிர­தே­சத்தில் ஈ மற்றும் நுளம்பு நாசினி திர­வத்தை தெளித்து சிறிய லொறி ஒன்றில் மீன்­களை விற்­பனை செய்த சந்­தேக நப­ரொ­ரு­வரை நேற்று முன்­தினம் அத்­து­ரு­கி­ரிய பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

விற்­ப­னைக்­காக கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள மீன்­களின் மீது நுளம்­பு­களை ஒழிப்­ப­தற்­காக பயன்­ப­டுத்தும் திர­வத்தை தெளித்து நப­ரொ­ருவர் மீன்­களை விற்­பனை செய்­வ­தாக அத்­து­ரு­கி­ரிய பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லொன்­றுக்­க­மைய அவ்­வி­டத்­துக்கு சென்ற பொலிஸார் நுளம்பு நாசினி போத்­த­லுடன் சந்­தேக நப­ரான மீன் வர்த்­த­கரைக் கைது செய்­துள்­ளனர்.

கைது செய்­யப்­பட்ட சந்­தேக நப­ரிடம் பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­போது, மீன்­களை விற்­பனை செய்­யும்­போது அவற்றின் மீது ஈக்கள், பூச்­சிகள் மொய்ப்­ப­தனால், மக்கள் மீன்­களை கொள்­வ­னவு செய்­யாமல் செல்­வ­தனால் தனக்கு வியா­பா­ரத்தில் நஷ்டம் ஏற்­ப­டு­வ­தா­கவும், அதனால் மீன்கள் மீது பூச்­சிகள் மொய்ப்­ப­தனை தவிர்ப்­ப­தற்­காக அவற்றின் மீது நுளம்பு நாசி­னியை தெளித்­த­தாக தெரி­வித்­துள்ளார்.

அதன் பின்னர் அத்­து­ரு­கி­ரிய பொது சுகா­தார பரி­சோ­தகர் ஹெட்­டி­ஆ­ரச்சி அவ்­வி­டத்­துக்கு வந்து லொறி­யி­லி­ருந்த மீன்­களை சோத­னை­யிட்­ட­துடன் அவற்றை மண்­ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு அழிக்­கு­மாறு உத்தரவிட்டார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அத்துருகிரிய பொலிஸாரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

Leave a comment