போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது!

518 0

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது!

வட மகாண சபையின் 2017 ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால், போரினால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளிட்ட 9 பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவியாக 3.5 லட்சம் ரூபா பெறுமதியான தொழில் உபகரனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

வட மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் உபகரனங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மகளிர் விவகார அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, பன்னாகம், சுழிபுரத்தைச் சேர்ந்த தம்பித்துரை ஞானம்பிகை என்பவருக்கு நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் PVC குழாய்களும், காளி கோவிலடி, காரைநகரைச் சேர்ந்த சற்குணராச சித்திரா என்பவருக்கு குளிர்சாதனப்பெட்டி ஒன்றும், வட்டுக்கோட்டை கிழக்கைச் சேர்ந்த மகேஸ்வரன் தர்சன் என்பவருக்கு இலத்திரனியல் தராசு, அலுமாரி, மேசை மற்றும் கதிரைகள் வழங்கப்பட்டது.

வட்டுக்கோட்டை தென் மேற்கைச் சேர்ந்த மகாதேவன் செல்வராணி, உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த தர்மலிங்கம் ஜெயயச்சித்திரா மற்றும் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த அமிர்தநாதன் மயூரதன் ஆகியோருக்கு தலா ஒரு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

வட்டுக்கோட்டை தெற்கைச் சேர்ந்த சிவநேசன் சர்ஸ்வதி என்பவருக்கு உழுந்தரைக்கும் இயந்திரம், கண்ணாடி அலுமாரி மற்றும் எரிவாயு உருளையும், நவாலி வடக்கு, மானிப்பாயைச் சேர்ந்த நடேசு பிரபாகரன் என்பவருக்கு கராஜ் அமைப்பதற்குத் தேவையான சீமெந்து மற்றும் கூரைத்தகடுகளும், வல்லை வீதி சங்கானையைச் சேர்ந்த தம்பித்துரை விக்னேஸ்வரன் என்பவருக்கு பனப்பொருட்களில் உற்பத்திசெய்யப்படும் பொருட்களை பொதிசெய்து விற்பனைசெய்யும் முயற்சியை மேற்கொள்வதற்குத் தேவையான மேசை, கதிரை மற்றும் பொதிசெய்யும் இயந்திரம் என்பனவும் வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாள்வழித்தல் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் வழங்கப்பட்டது.

இனவழிப்புப் போரினால் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் எமது சமூகத்தை பல்வேறு வழிகளில் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. அதற்கான நிதி ஒத்துழைப்பென்பது இலங்கை அரசாங்கத்திடம் இருந்து போதியளவு கிடைப்பதில்லை. வடக்கு மாகாண சபை எங்கள் கைகளில் இருப்பதால் கிடைக்கின்ற சொற்ப நிதியைக்கூட உண்மையில் பாதிக்கப்பட்டவர்களை இனம்கண்டு பகிர்ந்தளிக்க முடிகின்றது.

எப்போதும் உதவிகளை எதிர்பார்த்திருக்கும் நிலையை முற்றிலுமாக தவிர்த்து நீங்கள் நீங்கள் உங்களுடைய சொந்த முயற்சியில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சுயதொழில் ஊக்குவிப்பாக இந்த உதவிகளைச் செய்துவருகின்றோம். இவ்வாறு எங்களால் வழங்கப்படுகின்ற உதவியை நல்ல முறையில் பயன்படுத்தி உங்கள் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பி உயர்ந்த நிலைக்கு வருவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுயதொழில் முயற்சியை மேற்கொள்வதற்கான தொழில் உபகரனங்களை வழங்கிவைத்து அமைச்சர் பேசும் போது இவ்வாறு கூறியிருந்தார்.

Leave a comment