குளத்தில் மூழ்கி இரண்டு பேர் உயிரிழப்பு!

14761 32

வவுனியா, மாமடுவ பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் நீராடச் சென்ற சிறுமி ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை இவர்கள் இருவர் உள்ளிட்ட குழுவொன்று குளத்தில் நீராடிக் கொண்டிருந்த நிலையில் இரண்டு பேரும் காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைடுத்து மாமடுவ பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போனவர்களின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இரண்டு பேரும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

மகரம்பகுளம் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இணைஞர் ஒருவரும் 15 வயதுடைய சிறுமி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளது.

Leave a comment