மட்டக்களப்பு மீனவர்களின் உபகரணங்கள் மீது அசிட் வீச்சு

1632 42

மட்டக்களப்பு, ஏறாவூர், புன்னைக்குடா கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த மீன் பிடிப் படகு மற்றும் வலை என்பன மீது மர்ம நபர்கள் அசிட் ஊற்றி சேதப்படுத்தியுள்ளனர்.

சேதமாக்கப்பட்ட மீன்பிடி உபகரணங்களின் பெறுமதி சுமார் பதினைந்து இலட்ச ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடற்கொந்தளிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீன்பிடி உபகரணங்களும் சேதமாக்கப்பட்டிருப்பது மீனவர்களை கடும் பிரச்சனைகளுக்குள் தள்ளியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment