கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று.!

615 0

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் தொலை பேசி உரை­யா­டல்கள் வெளி­யா­கி­யுள்­ளமை யால் ஏற்­பட்­டுள்ள குழப்­பங்கள் மற்றும் உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் தாம­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை ஆகிய விட­யங்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக கட்­சித்­த­லை­வர்கள் கூட்டம் இன்று மாலை 5.30 இற்கு நடை­பெ­ற­வுள்­ளது.

சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய தலை­மை யில் இன்று நடை­பெ­ற­வுள்ள இக்­கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்தின் போது பிணை­முறி மோச­டிகள் தொடர்­பான விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ்­உரி­மை­யாளர் அர்ஜுன் அலோ­சி­ய­ஸுடன் தொலை­பேசி உரை­யா­டல்­களை மேற்­கொண்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் கோப் ­கு­ழு­வினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத் தும் ஐவரின் பெயர்கள் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்பட்டமை தொடர்பில் அண்­மைய நாட்­களில் தொடர்ச்­சி­யாக சபையில் ஆளும் எதிர்த்­த­ரப்பு உறுப்­பி­னர்­களின் வெளி­யிடும் பரஸ்­பர கருத்­துக்கள் தொடர்­பாக கவனம் செலுத்தி அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் தொடர்பில் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வுள்­ளது.

அதே­நேரம் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை திட்­டமிட்டு தாம­த­மாக்­கப்­ப­டு­வ­தாக ஆளும் தரப்பில் ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பி­னர்களும், கூட்டு எதிர்க்­கட்சி, ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு போன்ற தரப்­புக்­களும் சபையில் காட்­ட­மான கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்ற நிலை­யிலும் அவ்­வி­டயம் தொடர்­பிலும் கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்தின் போது கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது.

இதே­வேளை பிணை­முறி விவ­காரம் தொடர்பில் தனது பெய­ருக்கு களங்கம் ஏற் பட்டுள்ளமை தொடர்பாக பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா, ஹெக்டர் அப்பு ஹாமி, ஹர்சன ராஜகருணா உள்ளிட்ட உறுப்பி னர்கள் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பி யுள்ளனர்.

Leave a comment