பைஸ­ருக்கு எதி­ராக ஜே.வி.பி.யும் இன்று நம்­பிக்­கையில்லைா பிரே­ரணை

325 0

உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை இன்று வெள்­ளிக்­கி­ழமை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­க­வுள்­ள­தாக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டா­வு­மான அனுரகுமார திசா­நா­யக்க தெரி­வித்தார்.

தேர்­தலை நடத்த விரும்பும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் எமது நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்க வேண்டும். ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யாக இருந்தும் அமைச்சர் வேண்டும் என்றே தேர்தல் தாம­தத்­திற்கு வழி­வ­குத்­துள்ளார். எனவே இனி­மேலும் அமைச்சர் பைசர் முஸ்­த­பாவின் மீது நம்­பிக்கை வைக்க முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இது தொடர்­பாக பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் வைத்து நேற்று ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு அறி­வுத்தும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நீதி­மன்­றத்தில் வர்த்­த­மானி அறி­வு­றுத்தல் தடை விதித்­த­மையின் ஊடாக உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­தபா தனது பொறுப்­பையும் கட­மை­யையும் உரிய முறையில் நிறை­வேற்­ற­வில்லை என்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது.

அமைச்­சரின் அதி­கா­ரத்தின் கீழேயே எல்லை நிர்­ணயம் தொடர்­பான முறைப்­பாடு குழு­வினை அமைச்சர் பைசர் முஸ்­தபா நிய­மித்­துள்ளார். எனினும் அமைச்சர் தனக்­குள்ள அதி­கா­ரத்தை மீறி செயற்­பட்­டி­ருந்தால் அவ்­வா­றான வர்த்­த­மா­னியை ஒரு போதும் வெளி­யிட முடி­யாது.  அமைச்சர் பைசர் முஸ்­தபா தனது காரி­யத்தை உரிய முறையில் நிறை­வேற்­ற­வில்லை என்றே தோன்­று­கின்­றது.

இதன்­படி இன்று வெள்­ளிக்­கி­ழமை அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­க­வுள்ளோம். எனவே தேர்­தலை நடத்த விரும்பும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் எமது நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்க வேண்டும்.

கூட்டு எதி­ரக்­கட்சி  நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை சமர்ப்­பித்­தாலும் அவர்­க­ளது நிபந்­தனை என்­ன­வென்­பது எமக்கு தெரி­யாது. எனினும் நாம் அமைச்­சரின் குறைப்­பா­டு­களை இனங்­கண்­டுள்ளோம். இதன்­படி எல்லை நிர்­ணயம் தொடர்­பான முறைப்­பாடு குழு­வினை நிய­மித்தார். அந்த குழுவின் ஊடாக அமைச்சர் அதி­கா­ரத்தை மீறி செயற்­பட்­டுள்ளார். அவர் ஜனா­தி­பதி சட்­ட­த­ர­ணி­யாவார். இதன் விப­ரீ­தங்­களை அறிந்தும் அமைச்சர் பைசர் முஸ்­தபா வேண்டும் என்றே இவ்­வாறு செயற்­பட்­டுள்ளார். ஆகவே இந்த அமைச்சர் மீது இனி­மேலும் நம்­பிக்கை வைக்க முடி­யாது.

இதன்­படி நீதி­மன்­றத்­தி­லுள்ள வழக்கை மீள­பெ­ற­வி­டாத்து எந்த தரு­ணத்­திலும் தேர்­தலை எதிர்­பார்க்க முடி­யாது போகும். ஒரு­வேளை நீதி­மன்ற வழக்கு தோல்வி கண்டால் மீண்டும் எல்லை நிர்­ணயம் செய்ய வேண்டி வரும். ஆகவே இந்த வழக்கை வாபஸ் பெறுவதின் ஊடாக தேர்தலை உடன் நடத்த முடியும். மேலும் பழைய முறைமையின் பிரகாரம் தேர்தலை நடத்துவதாக இருந்தால் ஆரம்பித்தில் இருந்து சட்ட திருத்த செய்ய வேண்டும். எனவே இதுதான் தற்போது சிக்கலான நிலைமையாகும் என்றார்.

Leave a comment