பேர்பச்சுவல் கருவூல ஸ்தாபனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் குறிப்பிடத்தக்க காலம் வரை தமக்கு தெரிந்த நண்பர் எனவும், அவரை காப்பாற்றுவதற்கு எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
முதலாவதாக கோப் குழு ஸ்தாபிக்கப்பட்ட போது அதில் தாம் உறுப்பினராகி இருக்கவில்லை எனவும், 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பாராளுமன்றத்தில் இருந்து விலகி மீண்டும் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்பின் இரண்டாவது தடவையாக ஆரம்பிக்கப்பட்ட கோப் குழு 2016 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 8 ஆம் திகதி தனது பணிகளை முன்னெடுத்ததாக தெரிவித்தார்.
முதல் தடவையாக தாம் கோப் குழுவின் உறுப்பினராக இல்லாத தருணத்தில் அர்ஜுன் அலோசியஸ் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தாம் ஆரம்பம் தொடக்கம் அர்ஜுன் அலோசியசை அறிவதாகவும், மாகாண சபையில் இருந்த போது தொலைபேசியில் தாம் முதலீடுகள் தொடர்பாக கலந்துரையாடியதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

