பாரீசில் மாவீரன் நெப்போலியன் கிரீட தங்க இலை ரூ.5 கோடிக்கு ஏலம்

321 0

பாரீசில் மாவீரன் நெப்போலியன் கிரீட தங்க இலை ரூ.5 கோடிக்கு ஏலம் போனது. இதுபோன்று மாவீரன் பேரரசர் நெப்போலியனும் அவரது குடும்பத்தினரும் பயன்படுத்திய வேலைப்பாடு மிகுந்த 400 பொருட்களும் ஏலம் விடப்பட்டன.

மாவீரன் நெப்போலியன் 1804-ம் ஆண்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். அப்போது அவருக்கு விலை உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்பட்டது. அதில் தங்க இலைகள் பொருத்தப்பட்டிருந்தன.

கிரீடத்தின் எடை அதிகமாக இருந்ததால் அதில் பொருத்தப்பட்ட 6 தங்க இலைகள் பிரித்து எடுக்கப்பட்டன. பின்னர் அவை பொற்கொல்லர் மார்டீன் ருல்லியம் பியன்னேசிடம் கொடுக்கப்பட்டது.

அதை அவர் தனது மகள்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார். அதில் ஒரு தங்க இலை பாரீசில் உள்ள ஓசினெட் மையத்தில் ஏலம் விடப்பட்டது. அது ரூ.10 கோடி முதல் ரூ.1 கோடியே 50 லட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக அதாவது ரூ.5 கோடிக்கு ஏலம் போனது. இதுபோன்று மாவீரன் பேரரசர் நெப்போலியனும் அவரது குடும்பத்தினரும் பயன்படுத்திய வேலைப்பாடு மிகுந்த 400 பொருட்களும் ஏலம் விடப்பட்டன.

அவற்றில் நெப்போலியனின் மனைவி ராணி ஜோஸ்பினுக்கு சொந்தமான தங்க பூக்கள் அலங்காரத்துடன் கூடிய நகைபெட்டியும் அடங்கும்.

Leave a comment