சிறிலங்கா இராணுவத் தளபதியை யாழ் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

431 0

சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட யாழ். மேல் நீதிமன்றம், சிறிலங்கா இராணுவத் தளபதியை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நாவற்குழி இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக இருந்த துமிந்த கெப்பிட்டிவலன்ன தலைமையிலான இராணுவத்தினரால், நாவற்குழியில் கைது செய்யப்பட்டு, பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களை  மீட்டுத் தருமாறு கோரி அவர்களின்  உறவினர்கள் மூன்று ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவில் நாவற்குழி இராணுவ முகாம் பொறுப்பதிகாரியான துமிந்த கெப்பிட்டிவலன்ன முதலாவது எதிரியாகவும், இராணுவத் தளபதி இரண்டாம் எதிரியாகவும், சட்டமா அதிபர் மூன்றாம் எதிரியாகவும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்றது.

இதன்போதே, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை, நீதிமன்றில் முன்னிலையாகும்படி, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment