உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக மனு

33 0

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட, வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக, அறிவிக்கக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு, கண்டி, சாலிஎல, மாத்தறை எம்பிலிபிடிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அறுவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் குறித்த அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் நியமிக்கப்பட்ட உப குழுவின் பரிந்துரைகளை புறந்தள்ளி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் குறித்த வர்த்தமானி வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக, மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், இதுபோன்று செயற்பட அவருக்கு அதிகாரம் இல்லை எனவும், அது சட்ட விரோதமானது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, இந்த வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு, தமது மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம், மனுவை நாளை பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.