சுவிட்சர்லாந்தில் மரண நிகழ்வுக்கு சென்ற இலங்கையர்கள் அரசியல் அடைக்கலம் கோரியுள்ளனர்!

424 0

சுவிட்சர்லாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் குடும்பத்தினர் அந்த நாட்டில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ளனர்.

மனிதாபிமான அடிப்படையில் தமக்கு அரசியல் அடைக்கலம் வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்

2015ஆம் ஆண்டு முதல் சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் கோரிய நிலையில் ஒக்டோபர் 6ஆம் திகதியன்று சுவிட்ஸர்லாந்து பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் ஹரேன் என்பவரின் மரண சடங்கில் பங்கேற்பதற்காக அவரின் குடும்பத்தின் நான்கு அங்கத்தவர்களுக்கு ஒரு வாரகால வீசா வழங்கப்பட்டது.

மரணமானவரின் தாய் மற்றும் இரண்டு சகோதரிகள் ஒரு சகோதருக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது

இந்தநிலையில் அங்கு சென்ற அவர்கள் மூவரும் தொடர்ந்தும் சுவிட்ஸர்லாந்தில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

எனினும் இறந்தவரின் சகோதரர் சுவிட்சர்லாந்தில் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என அந்நாட்டு தூதுரகம் தெரிவித்துள்ளது.

Leave a comment