மறைமுக வரி 101 வீதத்தினால் அதிகரிப்பு!

213 0

வரவு செலவுத்திட்டத்தினுடாக மறைமுக வரி 101 வீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.இதனால் சகல பொருட்களின் விலைகளும் உயரும் என்று குறிப்பிட்ட அவர்,பிச்சைக்காரர்கள் முதல் கோடீஸ்வர் வரை இந்த வரியை செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றி அவர் மேலும்குறிப்பிட்டதாவது,

எமது ஆட்சியில் டொலர் 131 ரூபாவாக இருந்தது. இன்று அது 155.40 ரூபாவாக உயர்ந்துள்ளது. எமது ஆட்சியில் 1,855 பில்லியனாக இருந்த  அரச செலவினம் 3001 பில்லியனாக 61 வீதத்தினால் உயர்ந்துள்ளது.

எமது காலத்தில் 5.7 வீதமாக இருந்த துண்டுவிழும் தொகை 7.6 ஆக உயர்ந்தது. 5.2 வீதமாக உள்ள துண்டுவிழும் தொகையை 2018 இல் 4.8 ஆகவும் 2019 இல் 4.5 ஆகவும் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. உலக வங்கியின் இலக்குகளின் படியே இது முன்னெடுக்கப்படுகிறது.

எமது கல்விக் கொள்கை பழையது என்பதால் அதனை மாற்றுவதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கல்வித் துறையை தனியார் மயப்படுத்துவது இனித்தான் ஆரம்பமாகும். நான் கல்விஅமைச்சராக இருந்தபோது பல அழுத்தங்கள் வந்தன. மஹிந்த அரசாங்கம் அதற்கு தலை சாய்க்கவில்லை. கல்வித் துறைக்கு செலவிட்ட நிதியில் குறைந்தளவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் 20 வீதம் பயன்படுத்தப்படவில்லை. இதனை கொண்டு 30 மத்தல விமான நிலையங்கள் அல்லது 80 தாமரை கோபுரங்கள் கட்டலாம்.

அரசாங்கம் கடந்த 3 வருட காலத்தில் 431 பில்லியன் நாணயத்தாள்கள் அச்சிட்டுள்ளது.

Leave a comment