தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் வங்கிப் பாதுகாவலர் படுகாயம்

396 0

மாவனல்லை அரச வங்கி ஒன்றின் வங்கி பாதுகாவலருடைய துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பாதுகாவலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவனல்லை பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. அவரின் இடது கைப்பகுதியல் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வங்கியின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை அப்புறப்படுத்தும் போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாவனல்லை பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றின் வங்கி பாதுகாவலராக பணியாற்றும் இவர் தீவெல, மெதகம பிரதேசத்தைச் சேர்ந்த நிமல் கருணாதிலக என்று தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மாவனல்லை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment