மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலும் இந்திய துணை தூதரகம் அமைக்­கப்­பட வேண்டும்

158676 0

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலும் இந்திய துணைத் தூதரகம் அமைக்­கப்­பட வேண்டும் என லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதித் தலை­வரும் கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­ச­ரு­மான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறா­வூரில் நடை­பெற்ற மக்கள் சந்­திப்­பின்­போதே மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.

அவர் கூறு­கையில்

தமிழ்­பேசும் மக்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகா­ணத்தில் மக்கள் தமது தேவை ­களை நிறை­வேற்­றிக்­கொள்ள கொழும்­பு ­நோக்­கியே செல்ல வேண்­டி­யுள்­ளது. இதனால் பல சிர­மங்­களை அவர்கள் எதிர்­நோக்க நேரி­டு­வது தொடர்பில் மக்கள் பல தட­வைகள் முறை­யிட்­டுள்­ளனர்.

திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு மற்றும் அம்­பாறை ஆகிய மூன்று மாவட்­டங்­க­ளிலும் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்­கின்­றனர், இவர்கள் விசா மற்றும் ஏனைய தேவை­க­ளுக்கு இந்­திய தூத­ர­கத்தை நாட வேண்­டு­மானால் அவர்கள் கொழும்­புக்கே செல்ல வேண்­டி­யுள்­ளது, தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் கண்­டி­யிலும் யாழ்ப்­பா­ணத்­திலும் இந்­தியத் துணைத் தூத­ர­கங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அவ்­வா­றாயின் கிழக்கில் இந்­தியத் துணைத் தூத­ர­க­மொன்றை ஆரம்­பிக்­காமல் இருப்­பதில் எவ்­வித நியாயத்தன்­மையும் இல்லை,

கிழக்கில் உள்ள இந்­துக்­கள் பெரும்­பாலும் தமது ஆன்­மீகக் கட­மை­க­ளுக்கு் இந்­தியா செல்­கின்­றனர். இதற்­கான பய­ணங்­களை முன்­னெ­டுக்க அவர்கள் கொழும்­புக்கும் கிழக்­குக்­கு­மாக பஸ்­களில் அலைந்து திரிய வேண்­டி­யுள்­ளது, ஆக­வே­இந்த நிலைமை மாற்­றப்­பட மட்­டக்­க­ளப்பில் இந்­தியத் துணைத் தூத­ர­க­மொன்று அமைக்க வேண்டும்,

இதே­வேளை நாம்­ கி­ழக்கு மாகாண சபை­ ஆட்­சியில் இருக்கும்போது முன்­வைத்த திட்­டங்­க­ளுக்­க­மை­வாக இன்று மட்­டக்­க­ளப்பில் சர்­வ­தேச விமா­ன­ நி­லை­ய­மொன்றை அமைக்கப் போவ­தாக பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அறி­வித்­துள்ளார்,

Leave a comment