1400 ஏக்கர் மரமுந்திரிகைத் தோட்டக் காணிகளை விடுவிக்க மறுக்கும் படைத்தரப்பு!

368 0

வட மாகாணத்திலுள்ள மரமுந்திரிகை தோட்டங்களை பாதுகாப்புத்தரப்பினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.இதனால், தமது ஜீவனோபாயம் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்

மன்னார் – கொண்டச்சி பகுதியில் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரால் மரமுந்திரிகை செய்கை பண்ணப்படுகின்றது.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரால் சுமார் 1400 ஏக்கர் நிலப்பரப்பில் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் மரமுந்திரகை செய்கை பண்ணப்படுகின்றது.

குறித்த பகுதியை மீண்டும் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு வழங்குமாறு கோரி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிமினால் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்சிறி பண்டார கருணாராத்ன தெரிவித்தார்.

Leave a comment