பிளவடைந்த வாதங்களினால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது- ஜனாதிபதி

253 0

பிளவடைந்து வாதங்களை நடத்துவதன் மூலம் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் யாப்பு தொடர்பில் பிரிந்திருந்து தனித்தனியே விவாதங்களை நடத்துவதன் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வைக் காண வாய்ப்புகள் இல்லை.

எனவே இதற்கான அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி, தேவையான திருத்தங்களை முன்வைப்பதற்காக மூன்று பேரவைகள் உருவாக்கப்படவுள்ளன.

நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்காகவும், பௌத்த மதத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து மதங்களின் தலைவர்களுக்காகவும் பேரவைகள் உருவாக்கப்படும்.

அத்துடன் கல்வி சார் சமூகத்தவர்கள், புத்திஜீவிகள் ஆகிய தரப்பினருடனான பேரவையும் உருவாக்கப்பட்டு, விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment