உள்ளூராட்சி தேர்தல் குறித்து ஆராய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு 4 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது!

268 0

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பினால் கொள்கை ரீதி­யான தீர்­மா­ன­மொன்று எடுக்­கப்­பட வேண்­டு­மென பங்­கா­ளிக்­கட்­சி­யான ஈ.பி.ஆர்.எல்.எப். வலி­யு­றுத்தி வந்­திருந்த நிலையில் நடை­பெற்­றி­ருந்த ஒருங்­கி­ணைப் புக் குழு கூட்­டத்தில் எவ்­வி­த­மான தீர்­மா­னங்­களும் எடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இவ்­வா­றான நிலையில் உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை முகங்­கொ­டுப்­ப­தற்­காக கூட்­ட­மைப்­பிற்குள் இணக்­கப்­பா­டு­களை எட்­டு­வ­தற்­காக எதிர்­வரும் நான்காம் திகதி சனிக்­கி­ழமை மீண்டும் கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்புக் குழு கூட்டம் வவு­னி­யாவில் நடை­பெ­ற­வுள்­ளது.

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை குறித்து கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை தெளிவு­ப­டுத்­து­வ­தற்­கான கூட்­ட­மொன்று கடந்த பாரா­ளு­மன்ற அமர்வின் போது ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­த­போதும் அது நடை­பெற்­றி­ருக்­க­வில்லை. இதன்­போதே கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ஈ.பி.ஆர்.எல்.எப். தமது கட்சி இடைக்­கால அறிக்கை தொடர்பில் தீர்­மானம் எடுத்­துள்­ள­மையால் பாரா­ளு­மன்றக் குழுவில் ஆராய்­வ­தற்கோ அல்­லது விள­க்கம­ளிப்­ப­தற்கோ முன்­ன­தாக ஒருங்­கி­ணைப்புக் குழு கூட்­டத்­தினை கூட்டி கொள்கை ரீதி­யான முடி­வொன்றை எட்­ட­வேண்டும் என்று வலி­யு­றுத்தி வந்­தது.

இவ்­வா­றான நிலையில் புதிய அர­சி­யல­ மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக் ­கால அறிக்கை தொடர்பில் நேற்று முன்­தினம் காலை 9.30 மணியிலி­ருந்து மாலை வரையில் இருநாள் கருத்­த­ரங்­கொன்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­காக கொழும்பிலுள்ள எதிர்க்­கட்­சித் ­த­லைவர் அலு­வ­ல­கத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. அதே­நேரம் நேற்று முன்­தினம் மாலை 6.30 மணிக்கு கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்பு குழுக் கூட்டம் நடை­பெ­று­வ­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இரு தலை­வர்கள் பங்­கேற்­க­வில்லை

எதிர்க்­கட்­சித்­த­லை­வரும், கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மை யில் நடை­பெற்ற ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், ரெலோ அமைப் பின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி. ஆகியோர் பங்­கேற்­றி­ருக்­க­வில்லை.

இவ்­வா­றான நிலையில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி சார்பில் அதன் சிரேஷ்ட தலைவர் இரா.சம்­பந்தன், தலைவர் மாவை.சோ.சேனா­தி­ராஜா எம்.பி., அக்­கட்­சியின் வெளி­வி­வ­கா­ரங்­க­ளுக்­கான செய­லாளர் எம்.ஏ.சுமந்­திரன் ஆகி­யோரும் ரெலோ சார்பில் அக்­கட்­சியின் செய­லாளர் என்.ஸ்ரீகாந்தா, ஹென்றி மகேந்­திரன், கோவிந்தன் கரு­ணா­கரம், சுரேன், ஆகி­யோரும், புளொட் சார்பில் அதன் தலைவர் சித்­தார்த்தன் எம்.பி., ராகவன் ஆகி­யோரும், ஈ.பி.ஆர்.எல்.எப்.சார்பில் அதன் செய­லாளர் சிவ­சக்தி ஆனந்தன் எம்.பி. மற்றும் இரா.துரை­ரெட்ணம் ஆகி­யோரும்  கலந்துகொண்­டனர்.

ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் வலி­யு­றுத்தல்

ஈ.பி.ஆர்.எல்.எப். ஏற்­க­னவே வெளிப்­ப­டுத்­தி­வந்­த­மைக்கு அமை­வாக, புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை தொடர்பில் தமது கட்­சி­யினால் முடி­வொன்று எடுக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக இடைக்­கால அறிக்­கையில் உள்ள விட­யங்கள் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­தோடு ஒன்­றிப்­ப­தாக இல்லை. ஆகவே அதனை ஏற்­றுக்­கொள்­வதில் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக அர­சி­ய­ல­மைப்பு சார்ந்த நிபு­ணர்கள், புத்­தி­ஜீ­விகள், ஊடகத்­த­ரப்­பினர் இடைக்­கால அறிக்கை தொடர்பில் பல்­வேறு குறை­பா­டு­களை சுட்­டி­காட்­டி­யுள்­ளனர். அவ்­வா­றான நிலையில் நாம் இடைக்­கால அறிக்­கையை எந்­த­வ­கையில் ஆத­ரிக்க முடியும்? அதில் உள்ள விட­யங்­களை எவ்­வாறு மக்கள் மத்­தியில் கூற­மு­டியும்?

தற்­போ­தைய நிலை­மையில் மக்கள் எதிர்­பார்த்த விட­யங்கள் எது­வுமே இந்த இரண்­டரை ஆண்டுகளில் நடை­பெற்­றிருக்­ க­வில்லை. இதனால் மக்கள் மத்­தியில் எம்மால் செல்ல முடி­யா­த­வொரு நிலைமை ஏற்­பட்­டி­ருக்கின்­றது. ஆகக்­கு­றைந்­தது வீதி புன­ர­மைப்பு விட­யத்­தினை கூட நிறை­வேற்ற முடி­யாத சூழலே உள்ள நிலையில் நாம் இடைக்­கால அறிக்­கையை மையப்­ப­டுத்தி செயற்­பட முடி­யாது.

ஏற்­க­னவே ஐக்­கிய நாடுகள் மனித உரி­மை கள் சபையில் கால அவ­கா­சத்­திற்­கான அனு­ம­தியை அர­சாங்­கத்­திற்கு வழங்­கி­யுள்ளோம். அதில் அர­சாங்கம் எந்­த­வி­த­மான செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை. அர­சியல் கைதிகள் போரா­டு­கி­றார்கள். காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்கள் வீதியில் உள்­ளார்கள்.

காணி­களை விடு­விக்­கு­மாறும் மக்­களே போரா­டு­கின்­றார்கள். இவ்­வாறு மக்கள் தாமா­கவே முன்­வைந்து போராட்­டங்­களை முன்­னெ­டுக்­கின்­ற­போதும் அதற்­கான தீர்­வு­களைக் கூட  வழங்க முடி­யாத நிலையில் தான் நாம் இருக்­கின்றோம்.

ஆகவே அர­சாங்­கத்­திற்கு எல்­லா­வற்றுக் கும் ஆத­ர­வ­ளித்­துக்­கொண்டு இருப்­பது பொருத்­த­மான செயற்­பா­டாக தெரி­ய­வில்லை என்று  கூறப்­பட்­டது.

தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பதில்

இதன்­போது தமி­ழ­ர­சுக்­ கட்­சியின் தலை வர் மாவை.சோ.சேனா­தி­ராஜா, ஊட­கங்க ளில் பல்­வேறு கருத்­துக்கள் வெளியா­கின்­றன. அவை அனைத்­தையும் மையப்­ப­டுத்த முடி­யாது. தற்­போது இடைக்­கால அறிக்­கை­யொன்றே வந்­துள்­ளது. ஆகவே அர­சி­ய­ல­மைப்பின் அடுத்த கட்டச் செயற்­பா­டு­களின் போது எமது கோரிக்­கை­களை மேலும் வலு­வா­ன­தாக மாற்­று­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­ வேண்டும்.

தற்­போது தெற்­கிலும் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அணி­யினர் அர­சி­யல­மை ப்பு செயற்­பா­டு­களை குழப்­பு­கின்­ற ­நிலையில் நாம் ஏற்­பட்­டி­ருக்­கின்ற சந்­தர்ப்­பத்­தினை சிதைத்துவிட முடி­யாது. இறுதிவரையில் முயற்­சித்­துப்­பார்க்க வேண்டும். சர்­வ­தே­ச மும் தற்­போது கூடிய அக்­கறை கொண்­டுள்­ளது என்று குறிப்­பிட்­டுள்ளார்.

இதே­வேளை சுமந்­திரன் எம்.பி., அர­சி யல் கைதிகள் விட­யத்தில் சட்­டமா அதிபர் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் அர­சியல் கைதிகள் குறித்து தெரி­வித்த கருத்­துக்­களை பகிர்ந்து கொண்­ட­தோடு காண­ாம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான அலு­வ­லகம் அமைப்பது தொடர் பில் தாம் வழங்கிவரும் அழுத்­தங்­களை விளக்­கி­யுள்ளார். அத்­துடன் தற்­போ­தைய நிலை­மை­களை  கருத்­திற்­கொண்டு தான் முற்­போக்­கான விட­யங்­களை அங்­கீ­க­ரித்து வரு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

புளொட்டின் நிலைப்­பாடு

இத­னை­ய­டுத்து, புளொட் தரப்பில், புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான இடைக்­கால அறிக்கை வெளியா­கி­யுள்­ளது. இருப்­பினும் தமிழ் மக்­களில் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் இவ்­வி­டயம் தொடர்­பாக பெரி­தாக கரி­சனை கொண்­டி­ருப்­ப­தாக தெரி­ய­வில்லை. குறிப்­பிட்ட ஒரு பகு­தி­யி­னரே இவ்­வி­டயம் தொடர்­பாக பேசு­கின்­றனர். தமிழ் மக்கள் தமது அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வு­க­ளையே தற்­போது மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்று கரு­து­கின்­றனர்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டு­களை மட்டும் காரணம் காட்டி, நாம் மக்­களின் அன்­றாட தேவைகள் எதிர்­பார்ப்­புக்­களை கைவி­ட­ மு­டி­யாது. அது­தொ­டர்­பா­கவும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். குறிப்­பாக வேலை­வாய்ப்பு உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்­பா­கவும் கவனம் செலுத்த வேண்டும்.

அதே­நேரம் புதிய அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டு­களை நாங்கள் குழப்­பி­ய­வர்கள் என்ற நிலைமையை ஏற்­ப­டுத்­தாமல் இய­லு­மா­ன­வ­ரையில் இறுதி வரை முயன்று பார்க்க வேண்டும் என்று சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

ரெலோவின் இறு­தி­யான முடிவு

ரெலோ அமைப்பும் புதிய அர­சி­ய­ல­மை ப்பு தொடர்பில் இறு­தி­வ­ரை­யி­லான முயற்­சினை மேற்­கொள்ள வேண்டும். அதற்­கான சந்­தர்ப்­பங்கள் தற்­போது ஏற்­பட்­டுள்­ளன. ஆனால் தமி­ழீழ விடு­தலை இயக்­க­மா­னது  ஒரு­மித்த நாடு என்­ப­தற்கு பதி­லாக ஐக்­கிய இலங்­கையில் இணைந்த வட­கி­ழக்­கு­ட­னான தீர்­வொன்­றையே ஏற்­றுக்­கொள்ளும். இந்த விட­யத்தில் விட்­டுக்­கொ­டுப்பு செய்ய முடி­யாது என வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பாக தொடர்ந்து செயற்­ப­டு­வதே சிறந்ததாக அமையும். அந்த நிலைப்­பாட்டில் நாங்கள் உறு­தி­யாக இருக்­கின்றோம். அது மட்­டு­மன்றி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினை மேலும் வலுப்­ப­டுத்தும் வகையில் தமிழ்த் தேசிய சிந்­த­னை­யு­டைய கட்­சி­களை இணைத்­துக்­கொள்­வ­தற்கு கொள்­கை­ய­ள­வி­லான இணக்கம் ஏற்­ப­டு­மா­க­வி­ருந்தால் அதனை நாம் அங்­கீ­ரிப்போம் என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் 

இத­னை­ய­டுத்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் எதிர்­வரும் ஜன­வரி மாதம் நடக்­க­வி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கின்ற நிலையில் அது­கு­றித்த ஆயத்­தங்கள், வட் ­டார முறைமை என்­பதால் ஆசன ஒதுக்கீ டு கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண் டியுள்ளதாக ரெலோ மற்றும் புளொட் ஆகிய இரண்டு பங்காளிக்கட்சிகளும் பேச்சுக்களை தொடுத்திருந்தன. ஏற்கனவே ஒருங்கிணை ப்புக்குழு கூட்டம் ஆரம்பித்து ஒன்றரை மணித்தியாலங்கள் கடந்திருந்த நிலையில் அவ்விடயம் குறித்து பிறிதொரு தினத்தில் கலந்துரையாடுவதே பொருத்தமாக இருக் கும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் குறிப்பிட்டதையடுத்து எதிர்வரும் நான்காம் திகதி வவுனியாவில் உள்ளூரா ட்சிமன்ற தேர்தல் குறித்து கலந்துரையா டுவதற்காக மீண்டும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தினை கூட்டுவதென்ற இணக்கப் பாட்டின் அடிப்படையில் மேற்படி கூட்டம் நிறைவு பெற்றது.

தலைவர் பங்கேற்காமைக்கு ரெலோவின் காரணம் 

ரெலோ அமைப்பின் தலைவர் செல் வம் அடைக்கலநாதன் எம்.பி. பங்கேற்கா மைக்கான காரணத்தினை அவ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாகவே அவரால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியாது போனதாக மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment