நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, கேகாலை, மாத்தளை ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, அங்கு மலைப்பாங்கான பிரதேசங்களில் வாழும் மக்கள் அதிக மழை பெய்யும் சந்தர்ப்பங்களின் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்படுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மழையுடனான காலநிலை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கால நிலை அவதான மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது