50000 டொலர்களை வடமாகாண முதல்வர் சுருட்டினார் என வெளியிட்ட டி.பி.எஸ்.ஜெயராஜ் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்!

241 0

கடந்த ஜூன் மாதம் 18ஆம் நாள் ‘50000 டொலர்களை வடமாகாண முதல்வர் சுருட்டினார் என தலைப்பிட்டு’ தமிழிலும், ஆங்கிலத்திலும் தமிழ் வின் மற்றும் காலைக்கதிர் ஊடகங்களில் செய்தி வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உறவினரான டி.பி.எஸ்.ஜெயராஜ் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கனேடியத் தமிழ் அமைப்பினால், வட மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வுக்கென, முதலமைச்சர் நிதியத்துக்கு வழங்கப்பட்ட 50,000 ஆயிரம் டொலர் நிதியினை வடமாகாண முதலமைச்சர் மோசடி செய்துள்ளதாக குறித்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இச்செய்தியினை கனேடியத் தமிழ் அமைப்பு மறுத்து செய்தி வெளியிட்டுள்ளதுடன், முதலமைச்சர் நிதியத்துக்கு அப்பணம் அனுப்பப்படவில்லையெனவும், முதலமைச்சர் நிதியம் இயங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம்அனுமதி வழங்கவில்லையெனவும் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உறவினரான டி.பி.எஸ். ஜெயராஜ், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவரது ஆலோசகர் விமலன் கார்த்திகேயன் மற்றும் கனேடியத் தமிழ் அமைப்பு ஆகியோரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.

Leave a comment