பதினெட்டு வருடங்களின் பின் தமிழ் அரசியல் கைதி நீதிமன்றினால் விடுதலை

216 0
10 ஆண்டுகள் தடுப்பிலிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்று கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டார்.
பருத்தித்துறை அல்வாய் தெற்கைச் சேர்ந்த கனகரட்ணம் ஜீவரட்ணம் என்பவர்  2007ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் திகதி கருணா குழுவினரால் திருகோணமலை மொரவெவ என்ற இடத்திலிருந்து கடத்தப்பட்டார். கருணா குழுவினரால் அவர், திருகோணமலைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரைப் பொலிஸார் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் கையளித்தனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்  கனகரட்ணம் ஜீவரட்ணத்துக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றில் 2014ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அங்கு விசாரணைகள் இடம்பெற்று அவருக்கு எதிரான குற்றஓப்புதல் வாக்குமூலம் திருகோணமலை மேல் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது. கனகரட்ணம் ஜீவரட்ணம்  மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்படவிருந்த நிலையில் வழக்கு சட்டமா அதிபரால் மீளப் பெறப்பட்டது.
அந்த வழக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்குகளை விசாரிக்கும் கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டது. அங்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன. அரசியல் கைதி கனகரட்ணம் ஜீவரட்ணம் சார்பில் மூத்த சட்டத்தரணி கே.எஸ். இரட்ணவேல் முன்னிலையாகிவந்தார்.
அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றம் அவரை நேற்று விடுவித்துத் தீர்ப்பளித்தது.

Leave a comment