பாகிஸ்தான் பெண் ஊடகவியலாளரின் குற்றச்சாட்டு – இலங்கை கிரிக்கெட் சபை மறுப்பு

315 0

பாகிஸ்தான் பெண் ஊடகவியலாளரிடம் இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் சபை மறுத்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற போட்டித் தொடரொன்றின் போது, இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரியொருவர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றதாக, பாகிஸ்தானிய பெண் ஊடகவியலாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

இந்தநிலையில் இதனை மறுத்துள்ள இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கை ஊடகவியலாளர் ஒருவர் மீதே இவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் அச்சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment