வடகொரியாவின் அச்சுறுத்தல் தீர்மானமிக்கது – ஜப்பான் எச்சரிக்கை 

269 0

வடகொரியாவால் விடுக்கப்படும் அச்சுறுத்தல் தீர்மானமிக்கதும், நிச்சயமாக நடைபெறக்கூடியதுமாகும் என ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிலிப்பைன்ஸில் இடம்பெறும் ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டில் உரையாற்றியபோதே ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுநோர் ஒனோடேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மற்றும் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர்களை சந்தித்தபோது அவர் இதுகுறித்து கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வடகொரியாவின் இந்த அசாதாரணமான அச்சுறுத்தல்களுக்கு எந்த நேரத்திலும் பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும் என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a comment