



தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்; கையெழுத்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.இந்த போராட்டம் யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகி திருநெல்வேலி, யாழ்ப்பாணம், நல்லூர், சுன்னாகம் என முக்கிய இடங்களில் நடைபெற்றது.
இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறவுள்ளதாக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
இதனிடையே, இந்த கையெழுத்து திரட்டும் போராட்டம் சமகாலத்தில் கிழக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த போராட்டத்தின் மூலம் அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளாக,
உடனடியாக நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள்
• அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதபோராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல்கைதிகளின் வழக்குகள் அனுராதபுரநீதிமன்றத்திலிருந்து உடனடியாக வவுனியாநீதிமன்றத்திற்கு அல்லது யாழ்ப்பாணநீதிமன்றத்திற்கு மாற்றப்படல் வேண்டும்.
• உடனடியாக அனைத்து அரசியல்கைதிகளையும் பாரிய குற்றச்செயல்களுடன் (கொலை, களவு, கற்பழிப்பு, கடத்தல்) தொடர்புடையகுற்றவாளிகளுடன் தடுத்து வைப்பதை நிறுத்திஅவர்களிலிருந்து வேறுபடுத்தி பாதுகாப்பானசிறைகளில் தங்குவதற்கு துரிதநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
துரிதமாக மேற்கொள்ள வேண்டிய கோரிக்கைகள்
• சிறையில் அனைத்து தமிழ் அரசியல்கைதிகளினதும் வழக்குகள் உடனடியாகவிசாரணைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
• ஏற்கனவே இக் கைதிகள் பல வருடகாலமாககிட்டத்தட்ட 10-15 வருடங்களுக்கு மேலாகசிறை தண்டனையையும்இ சிறைக்குள் பலசித்திரவதைகளையும் தண்டனையாகஅனுபவித்தமை காரணமாக எந்தவிதநிபந்தனைகளுமின்றி துரித கதியில்’நிபந்தனைகளுமின்றி அற்ற விடுதலை’ செய்யப்பட்டு சமூகத்துடன் இணைக்கும்நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
• ஏற்கனவே வடக்குஇகிழக்கு மாகாணங்களில்புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டமுன்னாள் போராளிகளுக்கு சிறந்தவாழ்வாதாரம் மற்றும் தொழில்வாய்ப்புஎன்பவற்றில் அதிக கூடுதலான கவனம்செலுத்தப்பட வேண்டும்.
எனப்பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

