கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் புற்களை வெட்டிகொண்டிருந்த பணியாளர்கள் இரண்டு பேர் மீது மோட்டார் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த மோட்டார் வாகனத்தின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க – பமுனுகம பகுதியில் கடந்த 21 ஆம் திகதி மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட போதும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் ஜாஎல பிரதேசத்தை சேர்ந்தவர்களுடன், 41 மற்றும் 55 வயதானவர்கள் என தெரியவந்துள்ளது.

