திபெத்தின் புத்த மதத் தலைவர் தலாய்லாமாவை சந்திக்கின்றமை மிகப்பெரிய குற்றம் என சீனா உலக தலைவர்களை எச்சரித்துள்ளது.
தலாய்லாமா திபெத்தை சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து விடுவித்து சுயாதீனமாக செயற்படுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றார்.
அவர் சீனாவில் இருந்து இந்தியாவில் சரணடைந்து தமது செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றார்.
இவர் ஒரு பௌத்த ஆன்மீகவாதியென்றவகையில் உலகின் பல்வேறு தரப்பினரும் அவரை சந்தித்துவருகின்றனர்.
இந்த நிலையில் எந்தவொரு நாடோ அல்லது எந்தவொரு அமைப்போ தலாய்லாமாவை சந்திக்க ஒப்புக்கொண்டால், அது சீன மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் மாபெரும் குற்றம் ஆகும் என சீனா தெரிவித்துள்ளது.
தலாய்லாமா, வாழும் புத்தர் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவர் மதத்தின் பெயரால் அரசியல்வாதியாகத்தான் செயற்படுகின்றார் என சீனா தெரிவித்துள்ளது.

