கிளிநொச்சியிலும் மலேரியாவை காவும் புதிய வகை நுளம்பு

12776 0

கிளிநொச்சியிலும் மலேரியாவை காவும் புதிய வகை நுளம்பு -மலேரியா தடுப்பு இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி ம. ஜெயராசா

வடக்கில் ஏற்கனவே மன்னார் வவுனியா யாழ்ப்பாணம் மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியாவை காவும் புதிய வகை நுளம்பு வகை கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது. என கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி ம. ஜெயராசா தெரிவித்துள்ளாா்.
கடந்த 16 ஆம் திகதி கிளிநொச்சி திருநகர் வடக்கு பகுதியில் உள்ள கிணறு ஒன்றினுள் இவ் வகை புதிய நுளம்பு   கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு இயக்கத்தின் பூச்சியல் ஆய்வுப் பிரிவினரால்  மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வு நடவடிக்கையின் போதே இவ் வகை புதிய மலேரியா  காவி நுளம்பு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த  மலேரியா காவி நுளம்பு அனாஅக்பிலி ஸ்டீபென்சி என்ற நுளம்பு  நுளம்பே கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நுளம்பு  வகை கண்டுபிடிப்பானது  மலேரியா நோயின் மீள் வருகை அல்ல  எனவும் ஆனால் இப்புதிய நுளம்புகள் மலேரியா ஒட்டுண்ணிகளைக் காவிச் செல்லக் கூடியது என்றும்  என்றும் தெரிவித்த  ஜெயராசா, பொது மக்களுக்கு  காச்சல் ஏற்பட்டால்  அருகில் உள்ள அரச  வைத்திசாலைக்குச் சென்று  மலேரியா இரத்த பாிசோதனை செய்து கொள்ளுமாறும் குறிப்பாக மலேரியா நோய் இன்றும் காணப்படுகின்ற  இந்தியா உள்ளிட்ட தென்னாசிய நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்றுவருபவா்களுக்கு காச்சல் ஏற்பட்டால் அவசியம் மலேரியா இரத்த பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளாா்.
மேலும் மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் குறித்த மலேரியா  நோய்க் காவி நுளம்புகள் காணப்படுகின்றனவா என மாவட்ட  பூச்சியல் ஆய்வுப் பிரிவினரால்  ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும்  அவா் மேலும் குறிப்பிட்ட  அவா் பொது மக்கள்  இவ்வாறான சந்தர்ப்பங்களில்   நோய்த் தாக்கங்களை கட்டுப்படுத்த  தாங்கள செய்ய வேண்டிய  முக்கிய பணிகளான தங்களுடைய சுற்றுப்புறச் சூழலை நுளம்புகள் பெருக்கம் ஏற்படாத வகையில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்
இதேவேளை கிளி நொச்சி மாவட்டத்தில்  புதிய மலேரியா நோய்க் காவி நுளம்புகள் கண்டுப்பிடிக்கப்பட்ட இடங்களிலும், சுற்றயல் பிரதேசங்களிலும்  நுளபும்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என   கிளிநொச்சி பிராந்திய பதில்  பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரும், மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளருமான மருத்துவர் சி. மைதிலி குறிப்பிட்டுள்ளாா் .

Leave a comment