6 நாட்டு மக்களின் அமெரிக்க பயணத்துக்கு தடை – டிரம்பின் உத்தரவுக்கு கோர்ட்டு தடை

4983 0

ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளை சேர்ந்த பயணிகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நுழைய டிரம்ப் சமீபத்தில் தடை விதித்தார். டிரம்பின் இந்த கட்டுப்பாடுகளுக்கு கோர்ட்டு தடை விதித்துள்ளது.

ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்த பயணிகளும், வெனிசுலாவை சேர்ந்த குறிப்பிட்ட சில அதிகாரிகளும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நுழைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சமீபத்தில் தடை விதித்தார். இந்த தடை உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வருவதாக இருந்தது.

இதனிடையே, பிற நாட்டு பயணிகள் அமெரிக்காவில் நுழைவதற்கு தடை விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று கூறி ஹவாய் மாகாண அரசு உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி டெர்ரிக் வாட்சன், ஜனாதிபதி டிரம்பின் இந்த கட்டுப்பாடுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதுபற்றி நீதிபதி கூறியதாவது:-

6 பிரதான முஸ்லிம் நாடுகளில் இருந்தும், வட கொரியா மற்றும் வெனிசுலாவை சேர்ந்த சில அதிகாரிகளும் ஐக்கிய நாடுகளுக்கு வர தடை விதிப்பதை சட்டப்படி நியாயப்படுத்த முடியாது. மேலும், குறிப்பிட்ட 6 நாடுகளை சேர்ந்த 15 கோடி பேர் அமெரிக்கா வருவதால், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக்கு தீங்கு ஏற்படும் என்பதற்கு அடிப்படை ஆதாரம் இல்லை. முஸ்லிம்களை குறிவைப்பது, மத சுதந்திரத்தை பாதுகாக்கும் அமெரிக்க அரசியல் அமைப்பு சட்ட விதிகளை மீறுகிற செயல்.இவ்வாறு நீதிபதி டெர்ரிக் வாட்சன் உத்தரவில் கூறினார்.

Leave a comment