நடிகர் திலகம் சிவாஜியை மிஞ்சி விட்டார் நம்ம சிவாஜி!

631 0

சிவாஜிலிங்கம் 2001 டிசம்பர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானதில் இருந்து இன்று வரை அவரது அரசியல் நாடகம் புதிய புதிய பாத்திரங்களில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.

நாடாளுமன்றத்திலும் சரி , கண்டனப் பேரணிகள்,பிரச்சார கூட்டங்கள், உண்ணாவிர மேடைகள்,கவனயீர்ப்பு போராட்டங்கள், மறியல் போராட்டங்கள், எல்லாவற்றிலும் சிவாஜிலிங்கத்தின் குரல் ஓங்கி ஒலிப்பதை காணக்கூடியதாக இருக்கும். இது வரவேற்க்க தக்க  விடயமே. ஆனால் இதற்கு பின்னால் ஒரு சுயநல அரசியல் ஒட்டிக்கொண்டு இருந்ததை கடந்த 14 ஆம் திகதி தான் தமிழ் மக்கள் கண்டு கொண்டார்கள்.

இது ஒரு கனவா என குழம்பிப் போய்யிருந்த மக்களை தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ”இது கனவு அல்ல நிஜம்” என மக்களை விழிப்படையச் செய்தார்.

அனுராதபுரச் சிறைச்சாலையில் தொடர்ந்து உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று அரசியல் கைதிகளின்கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த 13ஆம் திகதி வடமாகாணம் எங்கும் பூரண கர்த்தால் அனுட்டிக்கப்பட்டதுடன் போராட்டங்களும் நடைபெற்றன.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் அந்த போராட்டத்தை குழப்பும் வகையில் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வடமாகாண ஆளுநரை சந்தித்தார். இது போராட்டக்காரர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

கடந்த 14 ஆம் திகதி யாழ் இந்துக்கல்லூரியில் நடை பெற்ற தேசிய தமிழ் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தரும் போது எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி ஏந்தி மக்களால்  போராட்டம் நடாத்தப்பட்டது.

கறுப்புக் கொடிப் போராட்டத்தில் எம்.கே.சிவாஜிலிங்கமும் கலந்துகொண்டு எதிர்ப்புத் தெரிவித்து போராடிக்கொண்டிருந்த வேளையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாகனத்திலிருந்து இறங்கி போரட்டங்காரர்களை சந்தி்க் கச் சென்றார். அவ்வேளை முதலில் ஓடி சென்று சிவாஜிலிங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகையை எதிர்த்து கறுப்புடை அணிந்து கறுப்புக்கொடி காட்டிய சிவாஜிலிங்கம் மறு நாள் 15 ஆம் திகதி நடைபெற்ற தேசிய தமிழ் தின நிகழ்வில் வெள்ளையுடையுடன் கலந்து கொண்டார்.

அன்று மட்டுமல்ல 2015 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக சிவாஜிலிங்கம் குருணாகல மாவட்டத்தில் போட்டியிட்டார்.

வடக்கு கிழக்கு இணைந்த தாயகமே தமது இலட்சியம் என்றும் , தமிழீழமே தமிழர்களுக்கான விடிவு என்றும்  கூறிக்கொள்ளும் சிவாஜிலிங்கம் வடக்கு கிழக்கிற்கு அப்பாற்பட்ட தேசத்தில் சென்று போட்டி இட்டபோதே அவரது வடக்குகிழக்கு இணைந்த தாயகக்கோட்பாடு உடைந்து விட்டது. இவர் ஓர் அரசியல் பகடக்காயாக செயற்படுகின்ற அதே வேளை இன்றும் சிறிசபாரத்தினத்தின் வழியை பின்பற்றுகிறார் என்பது புலனாகின்றது.

சிவாஜிலிங்கத்தின் நடிப்புகள் பல….அதில் கறுப்புக்கொடி காட்டிய  போரட்டத்தின் போது நடிகர் திலகம் சிவாஜியை விட நம் சிவாஜிலிங்கம் மிஞ்சி விட்டார்.

 

 

Leave a comment