தினகரன் சிறைக்கு செல்லும் காலம் வந்து விட்டது: அமைச்சர் ஜெயக்குமார்

53178 88

டி.டி.வி.தினகரன் சிறைக்கு செல்லும் காலம் நெருங்கி விட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அ.தி.மு.க.வில் இருந்து ஓரம்கட்டப்பட்ட டி.டி.வி. தினகரனுக்கும், அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் இடையே நாளுக்குநாள் மோதல் வலுத்து வருகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்ற பின்னர் இந்த மோதல் அதிகமாகி உள்ளது.

ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றதும் தினகரன் மிதப்பில் இருக்கிறார் என்று அமைச்சர்களும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் விமர்சித்தனர். ஆர்.கே.நகரில் தினகரன் பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டினர். இதற்கு தினகரனும் பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தினகரன் சிறைக்கு செல்லும் காலம் நெருங்கி விட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று அவர் அளித்த பேட்டி வருமாறு:-

டி.டி.வி.தினகரன் சிறைக்கு செல்லும் காலம் வந்து விட்டது. புதிய பஸ்களை வாங்குவதற்காகவே தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த குறையும் இல்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கவர்னர் ஆய்வு செய்து வருவதில் தவறு இல்லை. சட்டத்துக்குட்பட்டே அவர் ஆய்வு செய்து வருகிறார்.இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Leave a comment