மஹிந்தவை நாம் பாதுகாப்போம்- ரணில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பாதுகாப்பது தங்களுக்கே அதிகம் லாபகரமானது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அவருக்கு எந்தவொரு ஆபத்தும் வருவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் எனவும் பிரதமர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு நாடு முழுவதும் செல்ல வேண்டியுள்ளதனால் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைக் கூறினார். முன்னாள் ஜனாதிபதிக்குள்ள

