மெட்ரோ ரெயிலுக்காக இடிக்கப்பட்ட நேரு பூங்கா புதுப்பிக்கப்படுகிறது
மெட்ரோ ரெயிலுக்காக இடிக்கப்பட்ட நேரு பூங்கா புதுப்பிக்கப்பட்டு வருகிறது. வருகிற மார்ச் மாதம் பூங்காவை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயிலுக்காக இடிக்கப்பட்ட நேரு பூங்கா புதுப்பிக்கப்பட்டு வருகிறது. வருகிற மார்ச் மாதம் பூங்காவை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் தங்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியது. அதேநேரம் முஸ்லிம் காங்கிரஸ் எங்கெல்லாம் கால்பதிக்கிறதோ அங்கெல்லாம் தங்களுடைய பட்டியலை போட்டுக்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியாவதற்கு ஒருசிலர் முண்டியடிக்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியில் யார் சேர்ந்தாலும், சேராவிட்டாலும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துநின்று வெல்லக்கூடிய கட்சி என்பதை புத்தளம் மாவட்டத்தில் நிரூபிக்கவுள்ளது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று
உள்ளூராட்சித் தேர்தலில் தொகுதி உடன்பாடு காணப்பட்ட இடங்களில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்தும் ஏனைய பகுதிகளில் தனித்தும் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி கண்டி, மாத்தளை மாவட்டங்களில் முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது. மாத்தளை மாநகர சபைக்கும் கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி நகரசபைக்கும் ஏணிச்சின்னத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடுகின்றது. இதற்கான வேட்புமனுக்கள் நேற்றுமுன்தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணிச்சின்னத்திலேயே
காணாமல் போனோர் தொடர் பில் ஆராய்வதற்கான அலுவல கம் உடனடியாக தொழிற்பாட்டுக்கு வரவேண்டும். இதனை அரசாங்கம் விரைந்து உறுதிப்படுத்த வேண்டும். காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தை செயற்படுத்தும் செயற்பாட்டில் பாதிக்கப்பட்டோர், சிவில், சமூக அமைப்பினர் இடம்பெறவேண்டியது அவசியமாகும் என்று இலங்கைக்கு விஜயம் செய்த தன்னிச்சையாக தடுத்துவைத்தல் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகளின் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங் கம் உடனடியாக நீக்கவேண்டும். தாமதமின்றி அந்த சட்டத்தை அகற்றிவிடுமாறு அரசாங்கத்தை கோருகின் றோம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுவில் பாரிய தவறுகள் காணப்பட்ட போதிலும் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், தமது கட்சியின் சிறு தவறுகளுக்காக வேட்பு மனுக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டு எதிர்க் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எமது வேட்பு மனுவிலும் சிறு தவறுகள் காணப்படுகின்றமையை ஏற்றுக் கொள்கின்றோம். இருப்பினும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுவில் கட்சியின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிமின் பெயர் இடப்பட்டுள்ளதாவும் அவர்
கூட்டு எதிர்க் கட்சியினர் வேட்பு மனு தயாரிக்கும் போது பேராசிரியர் ஜி.எல். பீரிஸிடம் ஆலோசனை பெறாமல், சட்டத்தரணிகளிடம் பெற்றிருந்தால் இவ்வாறு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்காது என பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனு தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவரிடம் வினவிய போதே இதனைக் கூறியுள்ளார். ஐ.தே.க.யின் வேட்பு மனுக்களில் எந்தக் குறையும் இல்லை. கூட்டு எதிர்க் கட்சியின் வேட்பு மனுவில் காணப்படுவது போன்ற எந்தக் குறையும் தமது மனுவில்
எனது தந்தையான கப்டன் கே.பி. தசநாயக்கவை அநீதியான முறையில் கைதுசெய்து தடுத்துவைத்துள்ளனர். அவர் தொடர்பாக இலங்கை வந்த ஐ.நா. செயற்குழுவிடம் நான் முறைப்பாடு செய்ய வந்தபோதும் எனது முறைப்பாட்டை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், நீதிமன்றத்தில் தமக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் 6 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார். இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள் தற்பொழுது தீர்மானம் எடுத்து முடிந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு முழுவதுமுள்ள குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இம்மாதம் முதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப் போவதாகவும் இதற்கு அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் தடையாக வரவேண்டாம் எனவும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்தார். கம்பஹாவில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற புதிய பஸ் தரிப்பு நிலைய திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். நாம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முயற்சித்த சந்தர்ப்பங்கள் அனைத்திலும் அரசியல் கட்சிகள் தடையாகவே செயற்பட்டதாகவும், இதனாலேயே அம்முயற்சிகள் கைவிடப்பட்டதாகவும் அவர்
ஸ்ரீயானி விஜேவிக்ரமவுக்கு எதிராக தமது கட்சியின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக மஹஜன எக்ஸத் பெரமுன கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். தமது கட்சியினருக்கு வேட்பு மனுவில் பெயர் வழங்குவதில் சிக்கல் இருந்தமை உண்மைதான். அதற்காக தமது எதிரியுடன் கூட்டுச் சேர்வதற்கு தமது கட்சியில் அவருக்கு வாக்களித்த மக்கள் விரும்புவதில்லை. எதிர்வரும் தேர்தலில் அவருக்கு மக்கள் ஆதரவு இல்லையென்பது தெரியவரும். கட்சியின் வாக்கினால் தெரிவான அவர், கட்சியிலுள்ள மக்களின் விருப்புக்கு எதிராக செயற்படுத்த