நீதிபதிகளுக்கு சம்பளம் உயர்வு

Posted by - December 20, 2017

நீதிபதிமாருக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கு அமைச்சரவை நேற்று அனுமதியளித்துள்ளது. இதன்படி உயர், மேன்முறையீட்டு மற்றும் மேல்நீதிமன்றங்களின் ஊதியம் அதிகரிக்கப்படவுள்ளது. நீதி அமைச்சர் தலதா அத்துகோரள முன்வைத்த அமைச்சரவைப்பத்திரத்துக்கே அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நண்பகலுடன் நிறைவு

Posted by - December 20, 2017

248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நன்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. மேலும் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் நாளை நண்பகலுடன் நிறைவடையவுள்ளது. வேட்புமனுத் தாக்கலின் பின்னர் ஆட்சேபனை தெரிவிப்புக்காக ஒன்றறை மணித்தியாலங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் பிற்பகல் 01.30 க்கு தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வேட்புமனு தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி 10ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளுக்கு புத்தகம் விநியோகிப்பதில் தாமதம் – ஆசிரியர் சங்கம்

Posted by - December 20, 2017

அடுத்த வருடத்திற்கான பாடசாலைகளுக்கு புதிய புத்தகங்களை விநியோகிப்பதில் சிக்கல் உருவாகியிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். அடுத்த ஆண்டு, 50 சதவீதமான புதிய புத்தகங்களே வழங்கப்படும் என்றும், 50 சதவீதம் இந்த வருடம் வழங்கப்பட்ட புத்தகத்தை மீள பயன்படுத்துமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அனைத்து பாடசாலைகளிலும் இது சாத்தியமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில், கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவிக்கையில், 50 சதவீதம் பழைய புத்தகங்களை பயன்படுத்துமாறும்

யாழில் உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் கலை,கலாச்சார, பண்பாட்டு விழா!

Posted by - December 19, 2017

உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் கலை,கலாச்சார, பண்பாட்டு விழா எதிர்வரும் தை மாதம் 27ம் திகதி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்

Posted by - December 19, 2017

சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.\ நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்க 58 ஆம் நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும். எனவே பொதுமக்கள் சேதமாக்கப்பட்ட நாணயத்தாள்கள் கைவசமிருந்தால்

மெழுகுதிரி சின்னத்தில் தமிழ் சமூக ஜனநாயகக் கட்சி களத்தில்

Posted by - December 19, 2017

உள்ளூராட்சி மன்ற தேர்தலானது ஜெனிவா சம்பந்தப்பட்டதோ காணாமல் போனோர் சம்பந்தப்பட்டதோ அரசியல் கைதிகள் சம்பந்தப்பட்டதோ அல்லது அரசியல் தீர்வு சம்பந்தப்பட்டதோ அல்ல என முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். மட்டக்களப்பு பாலமீன்மடுவில் உள்ள அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் செயலாளர் சிறிதரன், மட்டக்களப்பு மாநகரசபை வேட்பாளர் குகன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இங்கு

பதவியை இராஜிநாமா செய்தார் நிமல் லான்சா

Posted by - December 19, 2017

உள்நாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர்  நிமல் லான்சா தனது பதவியிலிருந்து இராஜிநாமா செய்துள்ளார்.கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பிரதி அமைச்சர் நிமல் லான்சா பிரதி அமைச்சர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரியாத் அரண்மனை மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் – வீழ்த்தியதாக சவுதி தகவல்

Posted by - December 19, 2017

சவுதி அரேபியா தலைநகர் ரியாத் நகரில் உள்ள அரண்மனையின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், அதை சுட்டு வீழ்த்தியதாகவும் சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புளொட் அலுவலகத்திலிருந்து ஆயுதங்கள்மீட்பு- ஒருவர் கைது

Posted by - December 19, 2017

யாழ்ப்பாணம், வைத்தியசாலை வீதியில் உள்ள புளொட் அலுவலகத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் சில ஆயுதங்கள் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த வீடானது முன்னர் புளொட் அமைப்பின் அலுவலகமாக செயற்பட்டு வந்த நிலையில் பின்னர் நீதிமன்றில் வீட்டின் உரிமையாளரால் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இன்றைய தினம் நீதிமன்ற உத்தரவுக்கமைய வீட்டினை மீட்பதற்காக பொலிஸார் சென்ற போதே வீட்டின் அலுமாரிகளில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி வீட்டில் இருந்து ரீ.56

காரைநகரில் சுயேச்சைக்குழுவொன்று கட்டுப்பணம் செலுத்தியது

Posted by - December 19, 2017

யாழ்ப்பாணம், காரைநகர் பிரதேசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று காலை சுயேச்சைக் குழுவொன்று வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடம் மைனர் அப்புத்துரை தலமையிலான சுயேச்சை குழுவினரே காரைநகர் பிரதேசபையின் ஆறு வட்டாரங்களிலும் போட்டியிடுவதற்காக வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தனர். யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபை தேர்தலில் போட்டியிட சுயேச்சை குழுவொன்று யாழ்.மாவட்ட தேர்தல் திணைக்களகத்தில் கட்டுபணத்தை செலுத்தியுள்ளது. கோமதி ரவிதாஸ் தலைமையிலேயே நல்லூர் பிரதேசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு சுயேச்சை  குழுவொன்று இன்று