மலேசிய பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பான நிகழ்வுகள் அடங்கிய புகைப்பட ஆவணம் கையளிப்பு

Posted by - December 20, 2017

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்ட மலேசிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக்கின் முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கிய புகைப்படத்தொகுப்பு (Album) மற்றும் இருவெட்டு கையளிக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்வு கொழும்பு சங்கரி-லா ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்றது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக ஆகியோரினால் மலேசிய பிரதமரிடம் இந்த ஆவணங்கள் கையளிக்கப்பட்டன. இந்த ஆவணங்கள் அரசாங்க தகவல்

பிம்ஸ்டெக் அமைப்பின் மூன்றாவது கூட்டத்தொடரின் அமைச்சர்கள் மாநாடு கொழும்பில்

Posted by - December 20, 2017

பல்துறைசார் தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா வலய நாடுகளின் அமைப்பு எனப்படும் பிம்ஸ்டெக் அமைப்பின் மூன்றாவது கூட்டத்தொடரின் அமைச்சர்கள் மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (20) முற்பகல் கொழும்பில் ஆரம்பமாகியது. தெற்கு மற்றும் தென்கிழக்காசிய வங்காள விரிகுடா பிராந்தியத்தின் ஏழு நாடுகளான பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்த பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இந்நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களும் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

தபால் மூலமான வாக்களிப்பிற்கு வெள்ளிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம்

Posted by - December 20, 2017

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை உரிய தினத்தன்றோ, அதற்கு முன்னரோ தேர்தல் அலுவலகத்திற்குக் கிடைத்திருப்பது அவசியமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மேல் நீதிமன்றத்தில் நாள்தோறும் வழக்குகளை விசாரிப்பதனை கட்டாயப்படுத்த நடவடிக்கை

Posted by - December 20, 2017

விசேட சந்தர்ப்பங்களில் மற்றும் குறிப்பிடுவதற்கு உகந்த சாதாரண காரணங்கள் கொண்ட சந்தர்ப்பங்களை தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் மேல் நீதிமன்றத்தில் நாள்தோறும் வழக்குகளை நடாத்துவதை கட்டாயப்படுத்தும் வகையில் உறுப்புரைகளை உள்ளடக்கி 1979ம் ஆண்டின் 15ம் இலக்க சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் நீதி அமைச்சர் தலதா அதுகோரலவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேல் நீதிமன்றத்தில் நாள்தோறும் வழக்குகள் விசாரிக்கப்படாமையினால் வழக்கு விசாரிப்பதில் தாமதம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர்களுக்கு பிணை வழங்க மறுப்பு

Posted by - December 20, 2017

கல்கமுவ பகுதியில் தலப்பூட்டுவா  யானையைக் கொன்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள் இருவரினதும் பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

போலி ஆவணங்களைத் தயாரித்து 30 இலட்சம் பெறுமதியான காரை விற்றவர்!

Posted by - December 20, 2017

போலி ஆவணங்களைத் தயாரித்து 30 இலட்சம் பெறுமதியான காரை விற்று மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபரைக் கைதுசெய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

தாமரை மொட்டு ஆதரவாளர்களால் தாக்குதலுக்கு இலக்கான வைத்தியர்கள்!

Posted by - December 20, 2017

மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் நான்கு வைத்தியர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

நல்லிணக்கத்தின் அலைவரிசை எனும் பெயரில் புதிய தமிழ் அலைவரிசை

Posted by - December 20, 2017

“நல்லிணக்கத்தின் அலைவரிசை” எனும் பெயரில் புதிய தமிழ் அலைவரிசை ஒன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அரசாங்கத்தினுள் கொடுப்பதை பெற்றுக்கொண்டு வாய்மூடி இருக்க முடியாது.!

Posted by - December 20, 2017

கொழும்பு மாநகர சபையில் ” ஒருங்கிணைந்த முற்போக்கு கூட்டணியாக” களமிறங்குகின்றது தமிழர் முற்போக்குக் கூட்டணி. ஐக்கிய தேசியக் கட்சியுடன் முரண்பாடுகள் இல்லை,

கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த உலங்கு வானூர்தியில் சென்ற முஸ்லீம் காங்கிரஸ் முக்கியஸ்தர்!

Posted by - December 20, 2017

உள்ளூராட்சி சபைக்கான வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்த போதும் அது பயனளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மன்னாரில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து முதற்கட்ட பேச்சுவார்ததையினை மேற்கொள்ளும் வகையில் மு.காவின் உயர்மட்ட குழுவினர் விசேட உலங்குவானூர்தி மூலம் கொழும்பில் இருந்து மன்னார்