1520 அகதிகள் நாடு திரும்பினர்.!

Posted by - December 21, 2017

2017 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 619 குடும்பங்களைச் சேர்ந்த 1520 இலங்கை அகதிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உதவியுடன் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தூதரகம் இந்தத் தகவலை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தமக்கு உதவியளித்த அனைவருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இலங்கைக்கான தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் : வேட்புமனுக்களை ஏற்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு

Posted by - December 21, 2017

உள்ளுராட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்புமனுக்களை ஏற்பதற்குரிய கால அவகாசம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெறுகின்றது. இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் பூர்த்தியானதும், பிற்பகல் 1.30 வரை ஆட்சேபனைகளை தெரிவிக்க முடியுமெனவும் இறுதி வரை காத்திராது, நேர காலத்துடன் வேட்புமனுக்களை தாக்கல் செய்யுமாறும் , இதன் மூலம் தவறுகளையும், நிராகரிப்புக்களையும் தவிர்க்க முடியும் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல்.ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இரண்டு கட்டங்களாக ஏற்கப்பட்டன.

வில்பத்து விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்-சிறிசேன

Posted by - December 21, 2017

இந்நாட்களில் மீண்டும் வில்பத்து தொடர்பாக வெளியிடப்படும் ஊடக அறிக்கைகள் தொடர்பில்  தகவல்கள் கிடைத்தவுடனேயே அது குறித்து தேடிப்பார்க்க வேண்டியது சம்பந்தப்பட்ட   நிறுவனங்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுற்றாடல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சுற்றாடல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்களையும் அறிவுரைகளையும் வழங்குவதற்காக 1980 ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட சுற்றாடல் பேரவையின் 13 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக்

ஸ்ரீ ல.சு.க. அபேட்சகர்கள் மஹிந்தவையும் பயன்படுத்துங்கள்-இசுர தேவப்பிரிய

Posted by - December 21, 2017

முன்னாள் ஜனாதிபதி இன்னும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் எனவும், தேர்தலில் போட்டியிடும் கட்சி உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்தை தமது துண்டுப் பிரசுரங்களில் வெளியிட முடியும் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படத்தை அபேட்சகர்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவது சாதாரண நடவடிக்கை எனவும், இதற்கு மேலதிகமாக  மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்தையும் பயன்படுத்த முடியும் எனவும் நேற்று (20) முதலமைச்சர் செயலகத்தில்

ஜப்பானிய போர்க்கப்பல் திருகோணமலையில் நங்கூறமிட்டுள்ளது

Posted by - December 21, 2017

ஜப்பானியக் கடற்படையான கடல்சார் தற்காப்புப் படையின், போர்க்கப்பல் ஒன்று திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ளது. ஜே.எம்.எஸ்.டி.எப் செடோகிரி என்ற ஜப்பானியப் போர்க்கப்பலே இவ்வாறு மூன்று நாட்கள் நல்லிணக்கப் பயணமாக திருகோணமலை துறைமுகத்துக்கு வந்ததுள்ளது. திருகோணமலை துறைமுகத்தில் ஜப்பானிய போர்க்கப்பலுக்கு, இலங்கை கடற்படையினர் வரவேற்பு அளித்தனர். ஜப்பானிய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட அதிகாரிகளும் கப்பலை வரவேற்க வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் கப்பலில் வந்துள்ள ஜப்பானிய கடற்படையின் 7 ஆவது கப்பல் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கொமாண்டர் தகேஷி ரொனேகாவா

தேர்தல் வெற்றியால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தக்கவைக்க முடியுமா – யதீந்திரா

Posted by - December 21, 2017

உள்ளுராட்சித் தேர்தலை இலக்கு வைத்து இலங்கை தமிழரசு கட்சி பல்வேறு காய்களை நகர்த்தி வருகிறது.

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்..! – கம்பவாரிதி இ. ஜெயராஜ்

Posted by - December 21, 2017

உள்ளம் கொதிக்க இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். சென்ற வாரம்தான் நம் தலைவர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி எழுதியிருந்தேன்.

ஆர்.கே.நகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது

Posted by - December 21, 2017

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது.

தியாகராஜ பாகவதரின் 171-வது ஆராதனை விழா: கவர்னர் பன்வாரிலால் தொடங்கி வைக்கிறார்

Posted by - December 21, 2017

தியாகராஜ பாகவதரின் 171-வது ஆராதனை விழா ஜனவரி 2-ந்தேதி தொடங்குகிறது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசுகிறார்.

கொள்கையை சொற்களால் சொல்லாது வாழ்ந்து காட்டிய செயல் வீரன் பிரபாகரன்!

Posted by - December 20, 2017

தமிழீழ  தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சகோதரன்  வேலுப்பிள்ளை மனோகரனுடனான செவ்வி. 2 புதுமாத்தளன் சம்பவங்கள் நடைபெற்றபோது அவர் உங்களுடன் தொடர்பு கொள்ளவில்லையா..? தொடர்பு கொள்ளவில்லை.. குடும்பத்தின் நன்மை தீமைகளை பேசியவர்.. சார்லஸ் இறந்தாக காண்பிக்கப்பட்டபோது மட்டும் ஏன் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. அதுவும் குடும்ப நன்மை தீமைகளுக்குள் வரும்தானே.. மேலும் அப்போது நடேசன் பலருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.. அவர் மூலமாகவேனும்; அந்தச் செய்தியை ஏன் என்னிடம் கூறவில்லை. ஆம்.. அப்படியான நிகழ்வுகள் நடந்திருந்தால் குறைந்தபட்சம் நடேசன் மூலமாவது