உள் விவகாரங்களில் தலையீடு செய்ததாக கனடா, பிரேசில் தூதர்களை வெளியேற்றிய வெனிசுலா
சட்டவிதிமுறைகளை மீறுதல் மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் தலையிட்டதாக கூறி கனடா மற்றும் பிரேசில் தூதரக அதிகாரிகளை வெனிசுலா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.
சட்டவிதிமுறைகளை மீறுதல் மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் தலையிட்டதாக கூறி கனடா மற்றும் பிரேசில் தூதரக அதிகாரிகளை வெனிசுலா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.
தெற்கு பிலிப்பைன்சின் தவாவோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 37 பேர் உயிரிழந்திருக்கலாம் என அந்நகரின் துணை மேயர் தெரிவித்துள்ளார்.
பக்கிங்காம் அரண்மனையில் கிறிஸ்துமஸ் விருந்தின்போது இனவாதத்தை குறிக்கும் உடையில் குத்தும் ஊசியை பயன்படுத்தியதற்கு கெண்ட் இளவரசி மேரி கிறிஸ்டின் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மகளிர் அணி செயலாளர் பதவியில் நீடிப்பேன் என்று கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஏழரை கோடி தமிழக மக்களின் உணர்வுகளை ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள் பிரதிபலித்துள்ளதாக சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுனாமி நினைவு தினத்தையொட்டி இந்தாண்டு மெரினா கடற்கரையில் மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்த போலீசார் தடை விதித்துள்ள நிலையில், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் நடத்த அனுமதி அளித்துள்ளனர்.
சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் சுற்று முடிவடைந்த நிலையில் 15,868 வாக்குகள் பெற்று சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டி.டி.வி தினகரன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் பொரள்ளை, பேஸ்லைன் மாவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் 13 கிராமும் 100 மில்லிகிராம் நிறையுடைய போதைப் பொருள் இருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். அதே பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.
ஊரகஸ்மங்சந்தி பிரதேசத்தில் துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் திட்டமிட்ட குற்ற ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. இதன்போது சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றும் அதற்கு பயன்படுத்தும் நான்கு தோட்டாக்களும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எல்பிட்டிய நீதவான்