தோட்ட தொழிலாளர்கள் நாட்டுக்கு எதிராக போராட்டங்களை நடத்தவில்லை – அமைச்சர் கயந்த
தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியுள்ளனரே தவிர நாட்டுக்கு எதிராக போராட்டங்களை நடத்தவில்லை என காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். ஹட்டனில் இன்று இடம்பெற்ற தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெருந்தோட்ட சமுதாயத்திற்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த நாட்டின் உழைக்கும் வர்க்கமான தோட்ட தொழிலாளர்கள் உலகளாவிய ரீதியில் பெயர் விளங்கும் வகையில் சிலோன் டி யை உலக சந்தைக்கு

