நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

Posted by - October 30, 2017

நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஊவா மாகாணம் உள்ளிட்ட பல மாகாணங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும் என்று காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் மழை பெய்யும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேலும்,

அம்பாறை மாவட்டத்தில் நிர்வாகமுடக்கல் போராட்டம்

Posted by - October 30, 2017

அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது பகுதிக்கு பிரத்தியேக பிரதேச சபை ஒன்றை வழங்கக் கோரி, அந்த பிரதேச மக்களால் நிர்வாகமுடக்கல் போராட்டம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து மூன்று தினங்களுக்கு இந்த போராட்டம் நடத்தப்படும் என்று, சாய்ந்த மருது ஜும்மா பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஆர்ப்பாட்டத்தின் காரணமாக சாய்ந்தமருது நகரில் பல்வேறு வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. எனினும் வாகன போக்குவரத்து வழமைப் போல் இடம்பெறுவதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தோட்ட நிர்வாகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பதுளை – மடுல்சீமை –

டக்ளஸ் தேவாநந்தா மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு

Posted by - October 30, 2017

ஈ.பி.டி.பியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவாநந்தா மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. 1998ம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது. வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆறு பேருக்கு பத்தரை ஆண்டுகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பட்டாளர் எமில்காந்தன் உள்ளிட்ட 9 பேர் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்து

மோசமான காலநிலை மேலும் சில தினங்கள் நீடிக்கும்.!

Posted by - October 30, 2017

சீரற்ற காலநிலை தொடர்வதால் மலையக பகுதிகளுக்கு தொடர்ந்தும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் சாத்தியம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என காலநிலை அவதானி நிலையம் கூறியுள்ளது. நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் மழைக்காலநிலை நிலவும் நிலையில் அனர்த்தங்களும் பாதிப்புகளும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும், மலையகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய

கருணா விடுதலை.!

Posted by - October 30, 2017

9 கோடி ரூபாய் பெறுமதியான வாகனத்தை முறைக்கேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்று முன்னர்  விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, விநாயகமூர்த்தி முரளிதரனை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட அதிசொகுசு வாகனமொன்றை மீளகையளிக்காமல் தொடர்ந்து பயன்படுத்திவந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அவர், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், குறித்த வழக்கில்

பிரச்சினை சொற்கள் அல்ல, உள்ளே பாரிய பிரச்சினைகள் உள்ளன- கோட்டாபய

Posted by - October 30, 2017

உத்தேச அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையில் சில சொற்கள் மாத்திரமல்ல பிரச்சினைக்குரியது எனவும், இன்னும் பல பாரிய பிரச்சினைக்குரிய அம்சங்கள் உள்ளடங்கப்பட்டுள்ளதாகவும் அவை அனைத்தும் நீக்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சில தமிழ் மக்களின் சார்பான அரசியல்வாதிகளின் பேச்சுக்களில் உண்மையான பிரச்சினை எதுவென தெளிவாக விளங்க முடியுமாகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “எளிய” எனும் அமைப்பினால் கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்ட  நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கம் பெற்ற கடன்களை படிப்படியாக செலுத்த நடவடிக்கை -ரணில் விக்கிரமசிங்க

Posted by - October 30, 2017

பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாடு படிப்படியாக பயணிப்பதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த பொருளாதார வளர்ச்சியினூடாக கடந்த மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட கடன் தொகையை படிப்படியாகச் செலுத்துவதற்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தல் முறை மூலம் எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். ரத்மலானை ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளராகப் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவு செய்யப்பட்டதை

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு தொடர்பில் ஆராய 5 விசேட பொலிஸ் குழுக்கள்

Posted by - October 30, 2017

கொஸ்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு ஐந்து விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. அல்பிட்டிய பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி நிஹால் தல்துவ தலைமையில் குறித்த குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்று அதிகாலை இடம்பெற்ற மூன்று துப்பாக்கிச்சூட்டில் நான்கு நபர்கள் உயிரிழந்ததுடன் சிறு பிள்ளை ஒன்று காயத்திற்குள்ளானது. யுத பிடிய, குறுந்தகம்பியச, மெனிக் கம்மான உள்ளிட்ட பிரதேசங்களில் குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தை மூடி மாணவர்கள் போராட்டம்!

Posted by - October 30, 2017

அரசியல் கைதிகளின் போராட்டத்திற்குரிய தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் இன்று முதல் காலவரையறையற்ற கதவடைப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் நீதியமைச்சர் தலதா

Posted by - October 30, 2017

இலங்கை ஜன­நா­யக சோஷலிச குடி­ய­ரசு மற்றும் ஈரான் இஸ்­லா­மிய குடி­ய­ரசு நாடு­க­ளுக்­கி­டையில் தண்­டனை விதிக்­கப்­பட்ட சிறைக்­கை­தி­களை பரி­மாற்­றம் செய்து கொள்­வது தொடர்­பாக மேற்­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தத்­துக்கு நீதி அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள கடந்த 27ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை மாலை நீதி அமைச்சில் கைச்­சாத்­திட்­ட­தாக நீதி அமைச்சு அறி­வித்­துள்­ளது.