இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான  தொடர்புகளை  அதிகரிக்க வேண்டும் 

Posted by - October 30, 2017

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஈ தெரிவித்துள்ளார். குறிப்பாக முக்கியமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து இரண்டு நாடுகளும் கூர்ந்த அவதானத்தை செலுத்த வேண்டும்என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனை சீனாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அங்கு அவர், சீன வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது, அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பு பலப்படுத்தப்படும் அதேநேரம்,

கடற்படைத் தளபதி பதவியில் இருந்து அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தந்திரமாக நீக்கப்பட்டார்!

Posted by - October 30, 2017

கடற்படைத் தளபதி பதவியில் இருந்து அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா கடந்த வியாழக்கிழமை ஓய்வுபெற்று சென்ற போது “கடற்படையில் அதிக காலமும் குறுகிய காலமும் சாதனை படைத்த தமிழ்ர்கள்” என்று தமது செய்திக்குத் தலைப்பிட்டிருந்தது ஆங்கில ஊடகம் ஒன்று.

டேவிட் மெக்கீனன் – ருவன் விஜேயவர்த்தன சந்திப்பு!

Posted by - October 30, 2017

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கீனன் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேயவர்த்தன ஆகியோருக்கு இடையிலான விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

காணாமல் போனோரின் உறவினர்கள் கவனஈர்ப்பு போராட்டம்!

Posted by - October 30, 2017

திருகோணமலையில் இன்று யுத்தம் மற்றும் யுத்தமற்ற காலங்களில் காணாமல் போனோர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டார்கள். தொலைந்த தமது உறவுகளை தேடித்தறுமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர் வேண்டி நிற்பதை காணக்கூடியதாக இருந்தது. திருபோணமலை நகரில் சிவன்கோயில் அருகே காலை 10.00 மணிமுதல் 12.00 மணிவரை அவர்கள் கவணஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்!

Posted by - October 30, 2017

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க  ஐக்கிய தேசிய கட்சியின் திவுலபிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த வெற்றிடத்திற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கார் – ரயில் மோதி விபத்து இரு STF அதிகாரிகள் பலி

Posted by - October 30, 2017

பலபிட்டிய பகுதியில் இடம்பெற்ற விதத்தில் 2 பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். அம்பலாங்கொடை மற்றும் பலபிட்டியவுக்கு இடைப்பட்ட புகையிரத கடவை ஒன்றில் கார் ஒன்று ரயிலில் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதேவேளை, குறித்த சம்பவத்தில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டார் நாட்டின் உயர்மட்ட தூதுக்குழு இலங்கை வருகை

Posted by - October 30, 2017

கட்டார் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக அமைச்சர் அஷ்ஷெய்ஹ் அஹ்மத் பின் ஜாசிம் அல் தானி மற்றும் கட்டார் எயார்வேய்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி அக்பர் அல் பாகர் உள்ளிட்ட உயர்மட்ட தூதுக் குழுவினர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். நேற்று மாலை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்களை அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோர் வரவேற்றனர்.

இராணுவ அதிகாரியின் வாகனம் மோதி இளைஞன் படுகாயம்!

Posted by - October 30, 2017

வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இராணுவத்தின் உயர் அதிகாரி பயணித்த சொகுசு கார், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது மோதியதில் இளைஞன் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த உதயலக பிரியதர்சன (21) என்ற அவுசுதுபிட்டிய பகுதியைச் சேர்ந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த இராணுவ அதிகாரி மாங்குளம் இராணுவ முகாமில் உயர் அதிகாரியாக கடமையாற்றுவதாக

முல்லைத்தீவு கடலில் அபாய எச்சரிக்கை

Posted by - October 30, 2017

முல்லைத்தீவுக் கடற்கரையின் பிரதான இடங்களில் கடலுக்குள் இறங்குவதைத்தவிர்த்துக்கொள்ளுமாறு அபாய எச்சரிக்கை விளம்பரப்பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அபாய அறிவிப்பு 591 படைப்பிரிவினால் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அண்மையில் முல்லைத்தீவு கடலில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள் மரணமானதை தொடர்ந்து  அறிவிப்பு பலகை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.